Friday, July 14, 2017

சினிமாவுல என்ன புதுசு?


ராஜேஸ்வரி, நீர்கொழும்பு

சினிமான்னு பொதுப்படையா கேக்கிறீங்களாம்மா? இல்ல தமிழ் சினிமாவை பத்தி கேக்கிறீங்களா? தென்னிந்திய தமிழ் சினிமா இருக்குது, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், அப்புறம் அமெரிக்க இங்கிலீசு, இலங்கையில் சிங்களம், தமிழ்னு சினிமா இப்போ ரொம்ப விசாலம். சினிமா உலகத்துல பொதுவா என்ன பேசிக்கிறாங்கனு தெரிஞ்சிக்க விரும்புறீங்கன்னு  நெனைக்கிறேன். சரிதான…. ஒவ்வொன்னா சொல்லுறேன் கேளுங்க.

முதல்ல தமிழ் சினிமாவில் இப்பத்திய பேசு பொருள்

ஒரு சில நடிகர்மாருக்கு கதை சொல்லி சம்மதம் கேக்குறது பெரிய அக்கப்போர் புடிச்ச வேலை. கதையை விட கதை கேக்குற நேரம், இடம் புடிச்சிருந்தாதான் பெரிய நடிகர்களுக்கு மூடு வரும். அப்புறம் கதையில தன்னோட இமேஜை கூட்டுற மாதிரி திருத்தம் சொல்லுவாங்க … அதை அப்பிடியே செய்யணு இல்லேன்னா அம்பேல்தான். இப்படித்தான் சினிமாத்துறையில் அலைஞ்சி திரிஞ்சே ஒரு உதவி இயக்குனர், நடிகர் விஜய் சேதுபதி கிட்ட கதை சொல்ல போனாரு. அவுரு சொன்ன கதை சேதுபதி சாருக்கு பிடிச்சிப்போச்சி. அப்புறம் நடந்ததுதான் கிளைமாக்ஸ்.

“உங்கட கதை பிரமாதமா இருக்கு. ஆனா எனக்கு இப்ப உங்களோட படம் செய்ய நேரமில்லை இருந்தாலும் உங்களைப்போல திறமையுள்ள இயக்குனர் வாய்ப்புக்கு காத்துக்கொண்டிருக்கக்கூடாது. அதனால் உங்களுக்கு நான் ஒரு கோடி ரூபா தர்றேன். சின்ன படஜெட்ல புதுமுகத்தை வச்சி ஒரு படத்தை இயக்குங்க. அந்த படத்தை நானே ரிலீஸ் பண்ணிக்குடுக்குறேன். அப்புறம் வாங்க நான் நேரம் ஒதுக்கி வச்சிருக்கேன். ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாம்” விஜய் சேதுபதி சொல்லியிருக்காரு.
தமிழ் சினிமா வரலாற்றுலயே இப்படி ஒரு விஷயம் நடந்ததில்லன்னு பேசிக்கிறாங்க.

அடுத்தது தெலுங்கு சினிமா…

பாகுபலி 2 இந்தியாவில் 1400 கோடி, வெளிநாடுகளில் 300 கோடின்னு மொத்தம் 1700 கோடி வசூல் பண்ணியிருக்கு. ரெண்டாவதா இருந்த அமீர் கானோட ‘தங்கல்’ போன மாசம் சீனாவில வெளியிடப்பட்டதால இப்ப முதல் இடத்துக்கு  வந்திருக்கு.
ஆனா பாகுபலி 2 வெளியாகி இப்போ ஏழாவது வாரமா இன்னும் ஓடிட்டிருக்கு.அதேநேரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் பாகுபலி 2 சீனாவுல 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்போறாங்க. அங்க நடக்குற வெளியீட்டு விழாவில் படத்தோட நடிகர்களும் கலந்துக்க போறாங்க. அத்தோட இந்த வருட கடைசியில ஜப்பான் , கொரியா மற்றும் தாய்வான்லயும் பாகுபலி 2 ரிலீசாகப் போகுது. அதனால இந்தியாவுல அதிக கூடிய வசூலை பெற்ற படம் பாகுபலி 2 என்பது உறுதியாகிடும்கிறதுதான் தெலுங்கு சினிமாவுல இப்பத்ய பேசு பொருள்.

இப்போ மலையாளத்துக்கு வருவோம்

பாகுபலி 2 வெற்றியில் அனுகாவுக்கு பெரிய பங்கிருக்கு. இல்லைன்னு யாரும் சொல்ல முடியாது.. அது இப்ப வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு. ஆயிரம் கோடி ரூபா பட்ஜெட்ல இப்போ மகாபாரதம் படம் எடுக்கப்போறாங்களே அந்தப்படத்துல திரௌபதியா நடிக்கிறத்துக்கு அனுஷ்காவத்தான் கூப்பிட்டிருக்காங்களாம்.
ஐஸ்வர்யா ராணை கூப்பிடத்தான் யோசிச்சிருக்காங்க….. ஆனா பாகுபலி 2 வசூல் சாதனை அந்த எண்ணத்தை மாத்தியிருக்கு. அதுமட்டுமல்ல அனுஷ்கா நடிக்கிற முதல் மலையாளப்படமும் இதுதானாம்.

இப்போ ஹிந்திப்படம்

வட இந்தியாவில ரம்சான் பண்டிக்கைக்கு 3 ஆயிரம் தியேட்டர்களில் தனியொரு படமாக சல்மான் கானின் ‘டியூப் லைட்’ வெளியாகி சக்கை போடு போடுகிறது.
அதேநெரம் உலகளாவியரீதியில் 110 ஆயிரம் தியேட்டர்களில் ஓடுகிறது…. உலகளாவியரீதியில் 9 ஆயிரம் தியேட்டர்களில் ஓடி முதல் நாளில் 40.75 கோடி ரூபா வசூலை பெற்ற பாகுபலி 2 சாதனையை டியூப் லைட் முறியடிக்குமா? என்பதுதான் ஹிந்திப்படவுலகில் இப்போதைய கேள்வி.
‘டியூப்லைட்’ டில் சல்மானுக்கு எதையுமே லேட்டா புரிஞ்சுக்குற லூசுப்பையன் வேடடாம்

இப்ப வாறது அமெரிக்க இங்கிலிசு சினிமா

லண்டன்ஸ் பிறந்தாலும் எமி ஜாக்ஸன் ‘மதராஸ பட்டணம்’ மூலம் தமிழில்தான் சினிமாவுக்கு அறிமுகம். பிறகு ஹிந்திப்படம். இப்போ ரஜினியோட 2.0 படத்தில நடிக்கிறா. அடிக்கடி எமி.லண்டன் பறந்துருவா. பட்டணம் படத்துல நடிக்கிறத்துக்கு முன்னால எமி லண்டன்ல நாடகத்துல நடிச்சிருக்கு.
அதனால இந்த முறையும் லண்டன்ல இங்கிலிசு நாடகம் நடிச்சிட்டிருக்கிறப்போ ஹொலிவுட் டைரக்டர் ஆன்டரு மொரஹன் தன்னோட புதுப் படத்துக்கு நாயகியைத் தேடிட்டு அங்க வந்திருக்காரு. ஏமிய கண்டதும் அவருக்கு புடிச்சுப்போச்சி. என்னோட படத்துல நடிக்கிறியான்னு கேட்டிக்காரு . எம் உடனே சரின்னு சொல்லியிருக்கு. இங்கிலிசு பொண்ணுக்கே அஞ்சாறு இந்திய படத்துக்கு பிறகுதான் இங்கிலீசு படம்கிறதுதான் இப்பத்திய பேச்சு

இனி வாறது இலங்கை சிங்கள சினிமா 

நந்தன ஹேவாபன்னன்னு எங்கவூரு டைரக்டரு கின்னஸ் சாதனை படைச்சிருக்காரு. ஒரு படத்தோட கதை எழுதுறதை கடந்த ஜுன் 16 ஆம் திகதி காலையில 6.10க்கு ஆரம்பிச்சி அதை படமாக்கி 18 ஆம் திகதி மாலை 5.50க்கு திரையிட்டுக்காட்டியிருக்காரு. இதுக்கு மொத்தமா 59 மணித்தியாலம் 20 நிமிட நேரம் ஆகியிருக்கு.

‘சலகுன’ அடையாளம் என்ற அந்தப்படம் கெமராவில் எடுக்கப்பட்டு 90 நிமிடம் ஓடுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 1 கோடி ரூபாவை வெல்லும் 7 வயது சிறுமியை அவளது சொந்தக்குடும்பத்தினரே கடத்துவதுதான் கதை. அந்தக் கதையை திரைக்கதையாக எழுதி இயக்கி ஒளிப்பதிவும் செய்தவர் நந்தனதான். இதற்கு முன்னால் இந்த விடயத்தில் இருந்த சாதனைக்கும் சொந்தக்காரர் இவரேதான். 2014 இல் மங்கல கமன என்ற படத்தை இவர் 71 மணித்தியாலயம் 19 நிமிடங்களில் எழுதி, இயக்கி ஒளிப்பதிவு செய்து இவர் சாதனை படைத்திருந்தார்.

இனி இலங்கை தமிழ் சினிமாவுக்கு வருவமா?

 இலங்கையில் உள்ள இளவட்டங்கள் குறும் பட தயாரிப்பில் நிறைய அக்கறை எடுத்து வாறாங்க . ஆனா அவங்க குறும் படங்களை காதல் இல்லன்னா ஏமாற்றம்தான் மையக்கருத்தா அமையுது. அதில இருந்து மாறுபட்ட கருத்துல அமைஞ்ச ஒரு நல்ல குறும் படத்தை அண்மையில் பார்க்க முடிந்தது.
குறும்படங்கள் நிறைய தயாரிக்கிற வடக்குல இருந்து இந்தப்படம் வரல. மலைநாட்டுல இருந்து வந்தது. சரியா சொல்லப்போனா அந்தப்படம் வேற எங்கையும் இருந்து வந்திருக்க முடியாது. ஏன்னா அந்தபடத்துல வீசினது மலைநாட்டு மண்வாசம். வேற எங்கையும் கிடைக்காத அந்த மண்ணுக்கு மட்டும் உரித்தான ஒரு தனித்துவம் அது.
‘மனிதி’ ங்கற அந்தப்படத்தை வெளியிட்ட  மூன்நாவது நாளே யு.டியூப்ல பதிவேத்திடாங்க. தகவல் கிடைச்சவுடனே தட்டிப்பார்த்தா அந்தப் பெயர்ல 10, 12 குறும் படங்கள். அதில 3,4 இதே கருத்துல இருந்தது ஆனா அத்தனையிலயும் இந்த மலைநாட்டு ‘மனிதி’ மனசுக்கு பிடிக்குது. கதைக்கு முக்கியத்துவம் குடுக்கனுங்கிறதுக்காக பச்சைப் பசேளையா இருக்குற தேயிலை மலையை உவர் நிறத்துக்கு (GREY TONE) மாத்தியிருக்கிறாங்கன்னா பாருங்களேன். அது பச்சை மலை தேயிலையா இருந்தாக் கூட இந்த அளவுக்கு வந்திருக்குமாங்கிறது சந்தேகந்தான். எல்லாத்தையும் விட அந்த தலைப்பு காட்சிகள் கொசுறு. ஆனா அந்த குரலை மாத்தியிருக்கலாம். இது என்னோட கதைன்னு பாதிக்கப்பட்ட பெண் பேசுற மாதிரி இருந்திருக்கலாம். மனிதி தவிர வேறு எந்த தலைப்பும் தமிழில் இல்லாதது கொஞ்சம் நெருடல்.
நடிப்புல எல்லோரும் நல்லா செஞ்சிருக்காங்க. ஆனா கங்காணி ஒரு படி மேல.  மொத்தத்துல நல்ல முயற்சி.
 

No comments:

Post a Comment