Saturday, June 24, 2017

தனுஷ் ஆங்கில படத்தில் நடிக்கிறாரா?

அரவிந்த்.  பண்டாரவளை

'THE EXTRAORDINARY JOURNEY OF THE FAKIR'என்ற அந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது ஆரம்பித்துள்ளது. கனடாவை சேர்ந்த ஜென் ஸ்காட் டைரக்ட் செல்கிறாரா பெரனீஸ் பெஜோ,எரின் மொரியார்டி ஆகிய நடிகைகள் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்தப்படத்தின் கதை இதுதான்.

அஜா இந்தியாவில் உள்ள ஏழ்மையான ஆனால் திறமையான மாயாஜால வித்தைக்காரன். அவனது தாயின் கட்டளைப்படி அவன் பாரீஸ் செல்கிறான். அங்கு ஏற்படும் தகராறு காரணமாக மரச்சாமான் கடையில் உள்ள அலுமாரிக்குள் மாட்டிக்கொள்கிறான். கொள்ளைக்காரர்கள், எல்லையோர காவலர்கள் என்று பல ஆபத்துக்களை தாண்டியவாறு அஜா உலகை வலம் வருகிறான். என்பதுதான் கதை. தனுஷ் நல்ல நடிகர் ஆங்கிலத்திலும் கொடி கட்டுவார்.

தமிழ் சினிமாவில் என்ன புதுசு?
எம்.எம்.ஆப்தீன், புத்தளம்.

புதுசு,பூகம்பம்,மையம் எல்லாமே ரஜனிதான் தமிழகத்தின் பல இடங்களில் உள்ள தனது ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் படமும் எடுத்துக்கொண்டு தனது அரசியல் நோக்கம் பற்றி பேசியிருக்கிறார் ரஜனிகாந்த்.

நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க விரும்புபவர்களை அருகில் சேர்ததுக்கொள்ள மாட்டேன். நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் உள்ளது. எந்த நேரமும் அரசியல் போர் வரக்கூடும். எனவே ரஜனி ரசிகர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ரஜனி தன் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.
அத்துடன் தமிழகத்தில் நிலவும் வரட்சியை போக்க என்ன செய்யலாம்? ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக அளவில் ஊழல் செய்யும் அதிகாரி யார்? அரசியல்வாதி யார்? ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீர் ஆதாரம் என்ன? எந்தெந்த பகுதிகளில் உள்ள நதிகளில் எவ்வளவு நீர் வருகிறது? உங்கள் மாவட்டங்களில் எந்த நடிகர் பிரபலமாக உள்ளார்?  இந்த கேள்விகளுக்கெல்லாம் ஊருக்கு சென்று பதில் எழுதிக்கேட்டு வாருங்கள். தமிழகத்தில் நலனுக்காக இந்த பதில்களை திரட்டிக்கொண்டு பிரதமரைப் பார்க்கபோகிறேன் என்றும் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

ரஜனி விவகாரம் சர்சைக்குரியதாக மாறிவருவதாலும் ரஜனியின் வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் கூறிவருவதாகவும் ரஜனியின் வீட்டுக்கு முன் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள அ.தி.மு.க. அட்சி கலைக்கப்பட்டால் சுதந்திர தினமான ஆகஸ்ட் 16 ஆம் திகதி ரஜனி தனது புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிக்கலாம்.
35 வயதில் கெமரா முன் நடித்தேன். எத்தனை பாராட்டுக்கள் 65 வயதில் அரசியல் மேடையில் நடிக்கிறேன். எத்தனை போராட்டங்கள்.

சினிமாவில் எல்லோருமே பணத்துக்குத்தானே?
ராஜேந்திரன்,கொழும்பு

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சினிமாவில் பணம் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அந்த பூத்தாற் போல் ராஜ்கிரணைத் தெரியுமா? 100 படங்களுக்கு மேல் நடித்த அனுபவம் இருந்த போதும் அவர் உண்மையிலேயே நடித்திருப்பது சுமார் 30 படங்கள்தான். பணத்துக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன் என்று பகிரங்கமாகக் கூறும் கமல் நடத்தும் (பணத்துக்காகத்தான்) பிக்பொஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலத்தை அழைத்து பேட்டி காண்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு ராஜ்கிரணை அழைத்திருக்கிறார்கள். விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருப்பவர் ராஜ்கிரண். இதனையும் ஒரு விளம்பர நிகழ்ச்சி என்றே கருதினார். கமல் அழைத்தும் கூட ஐ ஆம் சரி என்று கூறியிருக்கிறார் ராஜ்கிரணை கொக்கா?
ஒரு சிலர் மட்டுமே விதி விலக்கு.

கமல் அரசியலுக்கு வருவாரா?
எம்.எஸ்.சிஹான் சிலாபம்
 5 வயதில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று களத்தூர் கண்ணம்மா மூலம் சினிமாவுக்கு வந்தவர் கமல். இன்று வரை தொடர்கிறார். கமலை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ஏ.வி.எம். நிறுவனம் தற்போது அந்த துறையில் இருந்து ஒதுங்கி இருக்கிறது. கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விடும் வியாபாரத்தை செய்து வருகிறது. கமலுக்கு இது தெரிந்தும் கொஞ்சம் கவலை. நாமிருக்கும் போது இப்படி நடக்கலாமா? என்று யோசித்திருக்கிறார். உடனே ஏ.வி.எம். உயர் மட்டத்தை அழைத்து தனது கால்ஷீட்டை கொடுத்திருக்கிறார். இப்போது கமலை வைத்து காமெடிப்படம் தயாரிக்கிறது ஏ.வி.எம். படத்தின் பெயர் ‘மெய்யப்பன்’ ‘மெய்யப்பன்’ வாயைத்திறந்தாலே சிரிப்புத்தான்.

ம்..ம் கமலுக்கு எல்லாமே சினிமா தான்.

No comments:

Post a Comment