Wednesday, December 7, 2016

அச்சம் என்பது மடமையடா பார்த்து விட்டீர்களா? எப்படி?

கவிதா, ஹேவாகம, பாதுக்க

முதல் பாதி ஆளை கொல்லுது. சிம்பு இப்போ ரொம்ப வளர்ந்துவிட்டார். வயதிலும், மனதிலும் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. இன்னும் ஓரிரு வருடங்களில் சிம்புவா? பிரபுவா? என்று கேட்க வைத்து விடும். மஞ்சிமா கதையின்படி, சிம்புவின் மடியில் விழுந்த பழம். இனிக்கிறார்.

இரண்டாம் பாதியில் முதல் பாதி நடக்கக் கூடியதுதான். ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்தக் கிளைமேக்ஸ், நம்பும்படியாகவா இருக்கிறது? இல்லவே இல்லை! சினிமா ஒரு பேன்டஸி என்பதை அந்த இடத்தில் சொல்லிக் காட்டுவது போல இருக்கிறது. முடிவை மாற்றியிருக்கலாம்.

வெளிநாட்டு படங்கள் பலவற்றைப் பார்த்து கௌதம் மேனன் குழம்பிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

விண்ணை நோக்கி நல்ல வேகத்தில் போய்க்கொண்டிருந்தவர்கள் அதை எட்டும் தூரத்தில் பரிதாபமாக விழுந்து பாதாளத்தில் தவிக்கிறார்கள்.

ஜெக்கி சானுக்கு ஒஸ்கர் கிடைத்திருக்கிறதே?
கிருஷ்ணா, வவுனியா

ஆறு வயது முதல் நடித்து வருகிறார் சான் கொங் சாங் (இதுதான் ஜெக்கி சானின் இயற்பெயர்). 56 வருடங்களில் - 20க்கும் மேற்பட்ட படங்கள். இப்போதுதான் அவருக்கு கிடைத்திருக்கிறது ஒஸ்கார் (கௌரவ ரீதியில் வழங்கப்பட்டள்ளது).

தனது சொந்த ஊரான ஹொங்கொங் ரசிகர்களுக்காகத்தான் இன்னும் ஜன்னல்களை உடைத்துக்கொண்டு குதிக்கிறேன். உதைக்கிறேன். மற்றும் அனைத்தையும் செய்கிறேன் என்கிறார் ஜெக்கி சான்.


எஸ்.ஜானகி பாடுவதை நிறுத்திவிட்டாரா?
அகல்யா, யாழ்ப்பாணம்

78 வயதாகிவிட்டது. மற்றவர்கள் பாடட்டுமே என்று பாடுவதை நிறுத்திவிட்டாராம். நிறுத்தினாலும் வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. 4 மாதங்களுக்கு முன் மலையாளத்தில் மிதுன் இசையமைப்பில் பாடியதுடன் நிறுத்திக் கொண்டேன் என்கிறார்.

இதுவரை 17 மொழிகளில் 45 ஆயிரம் பாடல்கள்! 1957 இல் பாட ஆரம்பித்தவர். 4 தேசிய விருதுகள் 32 மாநில விருதுகள் 2013 இல் பத்மபூஷண். ஆனால் அது தாமதமான அறிவிப்பு என்று கூறி விருதை வாங்க மறுத்துவிட்டார்.

கமல், கௌதமி பிரிந்து விட்டார்களே?
லக்சன், யாழ்ப்பாணம்

தமிழகம் கடந்த மாதம் அதீத அக்கறை காட்டிய விடயம் உங்களையும் கவலைப்பட வைத்துள்ளது. கௌதமியின் மகள் சுப்புதான் இந்த பிரிவுக்கு மையம். சுப்புவை நடிகையாக்க நினைக்கிறார் கௌதமி. முடிந்தால் செய்துகாட்டு என்று ஸ்ருதி சவால் விட்டாராம். அதனால் தனியே சென்று சுப்புவுக்கு சான்ஸ் தேடுகிறார் கௌதமி. இதற்கு கமலின் ஆதரவும் உள்ளதாம்!

தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடனும் கௌதமி பேசியிருக்கிறார். மணிரத்தினத்தையும் சந்தித்திருக்கிறார்.

மேக்கப் இல்லாமல் சில தமிழ் நடிகைகள் பார்க்கச் சகிப்பதில்லை. இவர்களுக்கெல்லாம் சுப்புவின் வரவு வயிற்றில் புளியை கரைக்கிறதாம்!

கீர்த்தி சுரேஷை இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்கிறதே!
ரேணுகா, கொழும்பு

பேஸ்புக்கில் கீர்த்தியை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளதே அதற்கு சாட்சியாக உள்ளது.

'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் இரண்டே வருடங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறார். இது ஒரு பெரும் உயரம்தான்!

சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ, இரண்டும் வெற்றி பெற்றதால் அவருக்குப் படங்கள் குவிகின்றன.

விஜயுடன் அவர் நடித்த பைரவா 2017 பொங்கலுக்கு வருகிறது. சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்'படத்தில் இப்போது நடித்து வருகிறார்.

ஸ்ரீ திவ்யாவை இவர் ஓரம் கட்டினார். இவரை ஓரம்கட்ட  வருவது யாரோ!


தமிழ் சினிமாவின் இன்றை நெகிழ்ச்சித் தருணம்?
ராஜேஸ், கண்டி

கோவாவில் நடைபெற்ற 47 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு 'நூற்றாண்டின் சாதனையாளர்' என்ற உயர்ந்த விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

இந்த விருதை பெற்ற போது அதனை தனது தாயாருக்கும் நாட்டை காக்க தனது உயிர்களை தியாகம் செய்த இராணுவத்தினருக்கும் பாடும் நிலா பாடலை அர்ப்பணித்தது நெகிழ்ச்சி தருகிறது.

No comments:

Post a Comment