Saturday, February 20, 2016

சினிமானந்தா பதில்கள் -31

'பீப் சோங்' (BEEP SONG) என்று ஒண்ணு வந்திருக்காமே?
ரவிக்குமார், பாலத்துறை

வந்திருக்கு ஆனா அது ஒரு பிரேவேட் பாட்டு. 'லூசுப் பொண்ணு', 'அடிரா உதைரா' மாதிரி சினிமாவுக்கோ இசை ஆல்பத்துக்கோ இதை எழுதலன்னு சிம்பு சொல்ராரு.
ஏதோ ஜொலிக்காக சிம்பு எழுதிய பாட்டாம் இது. அனிருத்து இசையமைச்சாராம். கம்பியூட்டர்ல பதிவு பண்ணி வச்சிருந்தாங்களாம். அதை யாரோ திருடி யுடியூப்பில் போட்டுட்டார்களாம். அது பரவலா வெளிவந்து பிரச்சினையைக் கிளப்புது.
"ஆமா நான்தான் படிச்சேன், அதுக்கென்ன இப்போ. இஷ்டமிருந்தா கேளு, இல்லண்ணா விட்டிட வேண்டியதுதானே! யுடியூபில் பலான படமெல்லாம் இருக்கு. அதை திரும்பத் திரும்ப பார்க்கிறோமே! நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்? ஆங்கிலத்தில் .... ன்னு எக்கச்சக்கமான பாட்டுல போட்டுத்திணிக்கல... அதைத்தான் நானும் சொல்லியிருக்கேன். அத்தோட இது ஒன்னும் படத்துக்கோ ஆல்பத்துக்கோ போட்ட பாட்டு இல்ல. ஜொலிக்காக படிச்சு பதிவு செய்தது. இது மாதிரி 150 பாட்டு என்னுடைய கம்பியூட்டரில இருக்கு. அதில் இருந்து யாரோ திருடி யுடியூப்ல போட்டிருக்காங்க அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நான் பாத்ரூம்ல, படுக்கையறையில செய்வதைப் பத்தி எப்படி எவரும் கேள்வியெழுப்பலாம்? அது என்னோட அந்தரங்கம். அதற்குள் நுழைய எவருக்கும் அனுமதியில்ல" என்கிறார் சிம்பு.

"எம் பெயரை இதுக்குள்ள இழுக்காதீங்க. எனக்கு இந்த விஷயத்துடன் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தப் பாட்டுக்கு நான் இசையமைக்கவும் இல்ல. பெண்களைப் பத்தி மோசமா எழுதின எந்தப் பாட்டுக்கும் நான் இசையமைக்க மாட்டேன்" என்று கனடாவில் இருந்து (சென்னை வெள்ள அகதிகளுக்கு நிதி சேர்க்க கனடாவுக்கு இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்) அறிக்கை அனுப்பியிருக்காரு அனிருத்.

அனிருத்தான் இந்தப் பாட்டுக்கு இசையமைச்சாரு. சிம்புதான் பாடினாரு. ஆனால சிம்புவோட கம்பியூட்டர்ல இருந்து யாரோ திருட்டுத்தனமா எடுத்து யுடியூப்ல போட்டிருக்காங்க. அப்படி களவெடுத்தவங்கள தேடிக் கண்டுபிடிங்க என்று பொலிஸ் கமிஷனருக்கே கடிதம் எழுதியிருக்காரு சிம்புவோட அப்பா டி. ஆர்.

இந்த நிலையில் பெண்களை இழிவு செய்து பாடல் பாடினாங்க என்று புகார் கொடுத்து கோயம்புத்தூரில் ஒரு பெண்கள் அமைப்பு பொலிசில் புகார் பண்ணி வழக்கும் பதிவு செஞ்சிருக்காங்க. பிணையில் வெளியே வரமுடியாத குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

இப்போ, சிம்பு தலைமறைவு, அனிருத் கனடாவில்.

இந்த லட்சணத்துல சிம்பு இப்படி பாடுனது தப்பில்லை. காதல்ல தோல்வியடைஞ்ச ஒரு இளைஞனோட மனக்குமுறல் இது என்று சிம்புவுக்கு ஆதரவாக ஒரு தரப்பு பேஸ் புக்கிலும், வாட்அப்பிலும் அலைஞ்சி திரியிராங்க.

ஒரு படத்துக்கு 30, 40 கோடி வாங்குற நடிகர் ரஜினிகாந்த் சென்னை வெள்ள நிவாரணத்துக்கு 10 லட்சம் ரூபாதான் கொடுத்தாராம். சின்ன நடிக, நடிகைங்க அதை விடக் கொடுத்தாங்களாமே?
ராஜேஸ், ஹட்டன்
சென்னை வெள்ளம் டிசம்பருக்கு முன்னரும் டிசம்பரில் 3 தடவையுமாக மொத்தம் நாலு கட்டங்களில் வந்திருக்கு. முதலாவது கட்ட வெள்ளம் வந்த போதே சென்னை மக்களுக்கு ஏதாவது செய்யனும் என்று மலேசியாவில் 'கபாலி' படப்பிடிப்பில் இருந்த ரஜினி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாராம். அங்கிருந்து சென்னைக்கு சொல்லியனுப்பி ராகவேந்திரா நிதியத்தின் மூலம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபா கொடுக்கப்பட்டது.

இந்த 10 லட்சம் முதல்வரின் நிதிக்காக நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு அனுப்பப்பட்டது.  ஒரு நடிகரின் சார்பில் முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு முதலில் கொடுக்கப்பட்ட நிதி இதுதான். அதுவும் அதிகாரபூர்வமாகக் கொடுக்கப்பட்டது.

தமிழ் நடிகர்கள் சார்பாக இணையத்தில் தற்போது நடக்கும் ஆதரவு - எதிர்ப்பு  போரில் தத்தமது தலைகளை உயர்த்திப் பேசும் ரசிகர்களுக்கு ரஜினியின் 10 அவலாகி விட்டது. அடுத்து அவர்களிடம் இருந்து அஜித் 60, விஜய் 5 கோடி என்று அறிக்கைகள் கிளம்பின. போதாதற்கு அஜித்தும் விஜயும் தத்தமது கல்யாண மண்டபங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக திறந்து விடப்பட்டுள்ளதாக பதிவுகள் வேறு. ஆனால் விஜயின் கல்யாண மண்டபத்தில் கல்யாணங்கள் நடந்தனவே தவிர வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்படவில்லை என்பதை ஆதாரபூர்வமாக புட்டுப்புட்டு வைத்தது பேஸ்புக் பதிவொன்று. அஜித்தின் கல்யாண மண்டபம் கதையும் அதேதானாம்.
அடுத்ததாக வந்தவை தெலுங்கு நடிகர்களின் டிவிட்டர் பதிவுகள். சென்னை நான் வளர்ந்த ஊர் என்று கூறி ஒருவர் 25 லட்சம் இன்னொருவர் 15 லட்சம் என்று தொடர் தொடர் டிவிட்டர்கள். மெல்லமெல்ல லட்சங்கள் கோடிகளாகின. சங்கக்கார அரை கோடி, முரளிதரன் 1 கோடி என்று ஆரம்பித்தது சாருக்கான் 50 கோடி பணம், 50 கோடி முதல் நாள் பண வசூல் என்று இணையத்தில் தெரிவிக்கப்பட்டது. இத்தனையும் வெறும் பதிவுகள் மட்டுமே. நிதி கொடுத்ததற்கான ஆதாரங்கள் அல்ல.

இந்த நிலையில் எதுவுமே கொடுக்காமல்தான் இதுவரை கொடுக்காத வரிப்பணம் எங்கே என்று அரசிடம் கேட்ட கமலுக்கு கிடைத்தது உளறல் நாயகன், கருத்து கந்தசாமி என்ற பட்டங்களே, கமலை வடிவேலு அளவுக்கு தரம் தாழ்த்திவிட்டார்கள். அதனையடுத்து கமலின் தெருவுக்கு கரண்ட் இல்லை. தண்ணீர் இல்லை, அங்கு குப்பை அள்ளவும் இல்லை. கொடுக்கப்பட்ட டார்சரில் கமல் பாரீசுக்கு பறந்து விட்டதாகக் கேள்வி.
ஆனால் பிறகு 15 லட்சம் நிதி உதவியதாக தெரிய வருகிறது.

நடிகர்கள் கொடுக்கிற பணம் உண்மையிலேயே நிவாரணத்துக்கு ஒழுங்கா பயன்படுத்தப்படுமா என்பது தெளிவா தெரியாத நிலையில் ரஜனி பத்து லட்சம் கொடுத்தா என்ன 10 கோடி கொடுத்தா என்ன? நடிகர்கள் பணம் கொடுக்கறது நாம இருக்கோம் என்று சொல்லிக் கொள்வதற்காகவே தவிர அதை வைத்துத்தான் அரசு மக்களைக் காப்பாற்றப் போகிறது என்பதில்லை.

2004 இல் முதலமைச்சரின் சுனாமி நிவாரண நிதிக்கு 21 லட்சம் ரூபாவை அப்போது வழங்கிய ரஜனிக்கு இது தெரியாதா?

1995இல் கோயம்புத்தூர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட குடும்பங்களுக்காக நிதியுதவி செய்த ரஜனிக்கு இது தெரியாதா?

1996இல் வெள்ள நிவாரண நிதிக்காக தனது ஒருநாள் பட வசூலைக் கொடுத்த ரஜினிக்கு இது தெரியாதா?

நடிகர் சங்கத்தின் நிவாரண நிதிக்காக ஹன்ஸிகா 15 லட்சம், ஸ்ரீதிவ்யா 10 லட்சம் என்றெல்லாம் பதிவுகள் கூறுகின்றன. சங்கத்தின் தரப்பில் விஷால் சார்பாக நாசர் கணக்கு கூறும்போது தான் சரியாக கணக்குகள் தெரிய வரும் அதுவரை அனைத்தும் வெறும் பதிவுகளே!

No comments:

Post a Comment