Friday, November 6, 2015

தேவதாசி வரலாறு -13

அருள் சத்தியநாதன்

தேவரடியார் மரபு சட்ட ரீதியாக இந்தியாவெங்கும் தடைசெய்யப்பட்டிருந்தாலும் கர்னாடகாவிலும் ஆந்திராவிலும் இன்றைக்கும் பெண்குழந்தைகளை கோவில்களுக்கு நேர்ந்து விடும் வழக்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் தேவரடியார் மரபு தமிழகத்தில் முற்றிலும் அகற்றப்பட்டிருக்கிறது. ஆனால் வறுமை மற்றும் அறியாமை காரணமாக பெண் குழந்தைகளை அவர்கள் பருவம் எய்துவதற்கு முன்னரேயே கோவிலுக்கு நேர்ந்து விடும் சம்பவங்கள் தமிழகக் கிராமங்களிலும் எப்போதாவது நிகழ்வதுண்டு. அவ்வாறான ஒரு சம்பவத்தையே கடந்த இதழில் பார்த்தோம். ஆனால் அவ்வாறு ஒரு சம்பவம் நிகழும்போது ஊடகங்கள் மூலம் அது தெரிய வருமானால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதையும் கடந்த இதழில் பார்த்தோம். கிருஷ்ணவேணியை மாவட்ட ஆட்சியர் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதோடு ~பொட்டு| தாலியையும் அறுத்தெறிந்திருக்கிறார்.
அமிகெமிக்காயெல்
தான் தத்தெடுத்த இரு பொட்டு
கட்டிய சிறுமியருடன்
தமிழகத்தில் இவ்வாறு தேவரடியார் மரபு அல்லது சிறுமியர் பொட்டுக் கட்டப்படும் வழக்கம் ஒழித்துக் கட்டப்படுவதற்கு பலரும் உழைத்திருக்கிறார்கள். அவர்களில் வட அயர்லாந்தைச் சேர்ந்த அமிகம்மிகாயேல் என்ற கிறிஸ்தவ பெண் போதகரும் ஒருவர். 1867 டிசெம்பர் 16ம் திகதி வட அயர்லாந்து மிலிஸ்லே என்ற ஊரில் பிறந்த அமி> 1895ம் ஆண்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு> இந்தியாவில் நிலவிய தேவரடியார் மரபு பெரும் அதிர்ச்சியை அளித்தது. தமக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாத வயதிலேயே ஏழைச் சிறுமியர்களை கோவில்களுக்கு நேர்ந்து ~கடவுளின் குழந்தை|யாக விடப்படுவதை வன்மையாக எதிர்த்த அவர்> அவ்வாறான சிறுமியரைக் காப்பாற்றி தத்தெடுத்து காப்பகங்களில் சேர்த்து பராமரித்தார். ஒரு சமயத்தில் அவரது காப்பகத்தில் சுமார் 700 சிறுமியர் வரை இருந்தனராம். பல நூல்களை இவர் எழுதியுள்ளார். தேவரடியார் மரபுக்கு எதிராக இவர் எழுதிய எதிர்ப்புக் குரல் அன்றைய ஆங்கில அரசின் காதுகளில் ஒலித்தது. அமியைப் போல வேறு பல ஐரோப்பியர் மற்றும் ஆங்கிலேயர்களும் பெண்களை தேவதாசிகளாக்கும் முறைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினர்.
காந்தியம்மாள்-திருக்குறுங்குடி
2001ம்-ஆண்டில் 86 வயது
தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி என்ற மருத்துவர்> இம்மரபை சட்ட ரீதியாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக போராடி> அதில் வெற்றி பெறவும் செய்தார். இவருக்கு பெரியார் ஈ.வே.ரா முழு ஆதரவு தந்தார். தமிழகத்தில் இம்மரபை முற்றுமுழுதாக ஒழிப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் பெரியாரின் பகுத்தறிவு பிரசாரமும்> பெண்ணுரிமை தொடர்பாக அவர் கொண்டிருந்த புரட்சிகரமான கருத்துகளும் காரணமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. முத்துலட்சுமியும் சரி> பெரியாரும் சரி இத்தேவரடியார் மரபை பெண் சுதந்திரத்துக்கு எதிரானதாகவும்> பலாத்கார விபசாரமாகவுமே பார்த்தார்கள். எதிர்த்தார்கள்.

இத்தொடரைப் படித்துவரும் சில வாசகர்கள் பொட்டுக் கட்டுதல் என்று குறிப்பிடப்படுவதை சுட்டிக்காட்டி> பொட்டுக்கட்டுதல் என்றால் என்னவென்று கேட்டிருக்கிறார்கள். எனவே பொட்டுக் கட்டுதல் என்றால் என்ன என்பதைப் பற்றி விரிவாக இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். 

சிறுமியர்க்கு தாலி அணிவிக்கும் சடங்கே பொட்டுக்கட்டுதல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தாலி அணிவிக்கப்பட்டதும் அச்சிறுமி கடவுளைத் திருமணம் செய்து கொண்டதாக கருதப்படுவார். எனவே> அச்சிறுமியால் அல்லது வளர்ந்த பின்னர் அப்பெண்ணால் ஒரு ஆடவனைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஏனெனில் ஏற்கனவே கடவுளுடன் அவளுக்குத் திருமணம் நடைபெற்று விட்டதே!

முன்னர் இப்பெண்கள் நடனத்தில் தேர்ச்சி அடைந்த பின்னரேயே பொட்டுக் கட்டும் நிகழ்வு விமரிசையாக நடைபெறும். எனினும் எந்த வயதில் பொட்டுக் கட்டப்பட வேண்டும் என்பது ஊருக்கு ஊர்> கோவிலுக்கு கோவில் மாறுபடும். அக்காலத்தில் அதாவது தடைச்சட்டம் வருவதற்கு முன்னர்> சிதம்பரம்> திருவாரூர் திருவிடைமருதூர் போன்ற ஊர்களில் ஐந்தில் இருந்து எட்டு வயதுக்குள் பொட்டுக் கட்டுதல் நிகழ்ந்து விடுமாம். தஞ்சையில்> பெண் வயதுக்கு வந்தபின்னர் அதற்குரிய சடங்குகளை செய்து விட்டு அதன் பின்னர் பொட்டுக் கட்டும் சடங்கை நடத்துவார்களாம். எட்டு வயதில் நடனத்தில் தேர்ச்சி பெற முடியுமா? இதனால் பொட்டு கட்டுதலை முடித்துவிட்டு அதன்பின்னர் நடனம் வாய்ப்பாட்டு என்பனவற்றை சொல்லிக் கொடுப்பார்களாம்.

எனவே> தாலியை அணிவிப்பதுதான் பொட்டுக் கட்டுதல்.
பொட்டுக் கட்டுதலுக்கு ஒரு புராண கதை காரணமாகக் கூறப்படுகின்ற போதிலும். அதற்கு அப்பால் யதார்த்த ரீதியான காரணங்களையே தேடிப் பார்க்க வேண்டும்.

ஒரு பெண்ணுக்கு பிரசவத்தில் சிக்கல் ஏற்படும்போது> பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால்> ~நல்ல படியாக பிரசவம் நிகழுமானால் பிறக்கும் குழந்தையை கோவிலுக்கு அர்ப்பணித்து விடுகிறோம்| என்று நேர்ந்து கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. அடுத்தது வறுமை. வறுமையில் வாடும் குடும்பத்தில் பெண் குழந்தை என்பது பெற்றோருக்கு சகிக்க முடியாத சுமை. எனவே> கோவிலுக்கு குழந்தையை காணிக்கையாக்கி விடுவார்கள்.

திருக்குறுங்குடி என்ற ஊரில் பொட்டுக்கட்டி விடப்பட்ட காந்திமதி என்ற தேவதாசி> தான் எப்படி தேவதாசியானேன் என்பதை விளக்குகிறார்.

~~என் தந்தை கோவிலில் வேலை பார்ப்பவர். வறுமையால் அவதிப்பட்டார். அப்போது நான் பிறந்தேன். ஒரு பெண் குழந்தை பிறந்ததைப் பார்த்த கோயிலைச் சேர்ந்தவர்கள்> ~காந்திமதியை பொட்டுக் கட்டி விட்டு விடு@ படிப்புச் செலவை கோயில் பார்த்துக் கொள்ளும்| என தந்தையிடம் சொன்னார்கள். இதை ஏற்று எனக்கு பெற்றோர் பொட்டுக் கட்டி கோவில் திருப்பணிக்காக அர்ப்பணித்தார்கள்|| என்று அவர் தான் தேவதாசியானது எப்படி என்பதை விளக்கியிருக்கிறார்.

இச்சடங்கு இரண்டு விதமாக நடக்கும். ஒன்று கோவிலில் இறைவனுக்கு முன்பாக நடத்தப்படும் பொட்டுக்கட்டுதல். இரண்டாவது வீட்டிலேயே நடத்தப்படும் சடங்கு. குருக்கள் வீட்டுக்கு வந்து சடங்கை நடத்திக் கொடுப்பார்.
பொட்டு கட்டுவதற்கு
பயன்படும் திரிசூலம்

கோவிலில் சடங்கை நடத்துவதாக இருந்தால்> பத்துத் தினங்களுக்கு முன்னரேயே கோவில் குருக்களிடம் முன் அனுமதி பெற்றுவிட வேண்டும். குறிப்பிட்ட தினத்தன்று அப்பெண்ணை அல்லது சிறுமியை மணப்பெண் போல அலங்கரித்து வீட்டாரும் உறவினர்களும் அவரை கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். குருக்கள் ஒரு தட்டில் மாலை> பூ> பழம் என்பனவற்றுடன் ஒரு தாலியையும் அதில் வைத்து இறைவன் பாதத்தில் இருத்தி பூஜை செய்வார். பின்னர் அத்தட்டை ~மாராயக்காரனி|டம் கொடுப்பார். பெண்களுக்கு பொட்டுக் கட்டிவிட்டு அவர்கள் செய்ய வேண்டிய கொவில் பணிகளை விளக்கிக் கூறுபவரை மாராயக்காரர் என்று அழைக்கிறார்கள். அவர் பூஜை தட்டில் இருக்கும் தாலியை எடுத்து அப் பெண் அல்லது சிறுமியின் உறவினரான ஒரு வயதான பெண்ணிடம் கொடுப்பார். அப் பெண் தாலியை வாங்கி கழுத்தில் கட்டி விடுவார். பின்னர் அனைவரும் கோவிலை வலம் வந்து வீட்டுக்குச் செல்வார்கள். அன்று முதல் பொட்டுக் கட்டிவிடப்பட்ட அப்பெண் அல்லது சிறுமி கோவில் தாசியாக இருப்பாள்.

இதுவே கோவிலில் பொட்டுக் கட்டிவிடப்படும் சடங்காகும்.

1 comment: