Thursday, September 3, 2015

சினிமானந்தா பதில்கள் -27

சினிமா என்பது வெறும் புனைவு மட்டுமே; அதில் நம்பும்படி எதுவும் இல்லை. எல்லாமே போலித்தனமாகத்தான் சித்தரிக்கப்படுகின்றன என்கிறேன். சரியா?
சுயம்பு, யாழ்ப்பாணம்

சினிமாவில் இரண்டு வகை உண்டு. features என்ற முழுநீள புனைவு ஒரு வகை. இவை பெரும்பாலும் கற்பனை கதாபாத்திரங்களையே கொண்டிருக்கும். ஆனால் அதில் என்னையும் உங்களையும் போன்று உண்மைத்தன்மையுள்ளவர்களைப் போல் காட்டுவார்கள். ரசிகர்களை பணம் கொடுத்து படத்தைப் பார்க்கச் செய்து வருமானம் தேடுவதே இதன் நோக்கம்.
1972இல் தயாரிக்கப்பட்ட
முதலாவது ஆவணப்படமான
'Nanok the North'இல் ஒரு காட்சி
மற்றைய வகை documentary எனப்படும் ஆவணப் படமாகும். உள்ளது உள்ளபடி முடிந்தவரை உண்மையாகச் சொல்வதே இதன் நோக்கம். இவற்றைப் பெரும்பாலும் இணையத்தில் அல்லது தொலைக்காட்சியில் பார்க்கலாம். discovery,geo,animal planet ஆகிய சேனல்களில் இவை ஒளிபரப்பாகும். இந்த படங்களுக்கும் நல்ல மவுசு உண்டு.

அடங்கொப்புரான, சாமிப்படங்களை கூட நீவிர் நம்பமாட்டேளோ? உம்மை பிரம்மஹஸ்தி தோஷம் பிடித்தாட்டப்போறது காணும். சித்த கவனமாயிருங்கோ!

இந்தியாவில் அதிக வசூலை குவித்த படம் 'பாகுபலி' தானே?
ஆர். ஆஷா - இரத்தினபுரி
என். பானுஜா - யாழ்ப்பாணம்

இல்லை. அந்தப் பெருமை 'பயிராங்கி பய்ஜான்' என்ற இந்திப் படத்துக்குத்தான் என்றால் நம்பமாட்டீர்கள். ஆதாரத்தோடு தருகிறேன். இரண்டு படங்களும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு மேல் ஓடும் 'பாகுபலி'யின் வசூல் 500 கோடி ரூபாவை தாண்டியுள்ளது. ஒன்றரை மாதத்துக்கு மேல் ஓடும் 'பயிரங்கி' 500 கோடி எல்லையை எட்டியுள்ளது. ஆனால் இந்தியாவில் 20க்கு மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் உலகில் பல நாடுகளில் திரையிடப்படுவதால் 'பயிரங்கி'யின் வீச்செல்லை அதிகம். எனவே இம்மாத (செப்டம்பர்) ஆரம்பத்திலேயே 'பயிரங்கி' இந்தியாவில் அதிக வசூலை தந்த படம் என்ற பெருமையை பெற்றுவிடும்.
'பயிரங்கி பய்ஜான்' கதை எளிமையானது. 'பாகுபலி' போல் பிரமாண்டம் இல்லை. பாகிஸ்தானில் இருக்கும் ஷாயிதா (ஹர்ஸாலினி மல்ஹோத்ரா) 6 வயது பிஞ்சு. பிறந்தது முதல் பேச முடியாது. டெல்லிக்கு சென்று மருத்துவம் பார்த்தால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் ஷாயிதாவை டெல்லிக்கு அழைத்து வருகிறாள் அவளது தாய். ஆனால் யார் செய்த பாவமோ டெல்லியில் ஷாயிதா காணாமற் போகிறாள்.

டெல்லியில் சல்மான்கான் ஒரு ஹனுமான் பக்தர். எங்கே குரங்கைக் கண்டாலும் குனிந்து கும்பிடுவார். உண்மையே பேசுவார். அவரிடம் சேர்கிறார் ஷாயிதா (சல்மானுக்கு அவள் முன்னி) பாகிஸ்தானுக்கு பாஸ்போர்ட் எடுக்கும் விடயத்தில் ஏமாற்றப்பட்ட சல்மான் பாஸ்போர்ட் இல்லாமல் முன்னாவை பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்று முன்னாவை அவளது தாயிடம் சேர்ப்பதுதான் கதை.

ஹனுமான் பக்தி, சல்மானின் அசட்டு நடிப்பு, ஹர்ஸாலினியின் குழந்தைத்தனம், இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும் அரசியல்தான் பிரிக்கிறதே தவிர உணர்வுகளால் அவர்கள் ஒன்றுபட்டவர்கள் என்ற மனிதாபிமானம், பேச முடியாத முன்னிக்கு படத்தின் இறுதியில் பேச வருவது, இருநாட்டு எல்லையில் சுடப்பட்டு நொண்டியடிக்கும் சல்மானை பாகிஸ்தான் எல்லையில் இருந்து முன்னி 'மாமா' என்று முன்னி அழைக்கும் நெகிழ்ச்சித் தருணம் ஆகிய அனைத்தும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

இரண்டு படங்களுக்கும் ஒரு பெரிய ஒற்றுமை உண்டு. 'பாகுபலி' கதையை எழுதிய விஜயேந்திர பிரசாத்தான் 'பயிரங்கி' கதையையும் எழுதியிருக்கிறார். இவர் 'பாகுபலி' இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் தந்தை.

கம்பியூட்டர் பிரமாண்டத்தை விட ஹனுமான் பக்திக்குத்தான் இந்தியாவில் மவுசு.

'36 வயதினிலே'யின் பின் ஜோதிகா ஏதும் புதுப் படங்களில் நடடிக்கிறாரா?
ஜே. கே. ஹட்டன்

நடிக்கிறாரே! 'பாகுபலி' டைரக்டர் ராஜமௌலியின் அடுத்த படம் மற்றும் ராகவா லோரன்ஸின் காஞ்சனா-3 (நாகா) படத்தில் பாம்பாக வந்து பயமுறுத்தப் போவது முண்டக்கன்னி 'ஜோ'தான்.
அனுஹாஸன்
வீட்டு வேலை, குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றிலேயே பொழுது போய் விடுகிறது. நடிப்பதற்கு எங்கே நேரம் என்று ஜோதிகா அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாலும் அவரது வீட்டு வாசலில் தயாரிப்பாளர்கள் கியூ!

அடுத்து வரும் படங்களில் எதுவெல்லாம் 'ஹிட்டு'?
என். நதியா - மொனராகலை

ஹிட் படங்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எல்லாம் ஒரு அனுமானம் தான். வட சென்னை, நாகா, வல்லதேசம் ஆகியவை 'ஹிட்' டடிக்கலாம்.

வல்லதேசம் டிரைலர் மிரட்டுகிறது. காணாமற்போன மகளைத் தேடி அனுஹாஸன் மேற்கொள்ளும் அதிரடி பயணம் சிலிர்க்க வைக்கிறது. ராசாத்திக்கு ஆரத்தி எடுத்த தட்டு தயாராகிறது. இம்முறை பொம்பள கமலுக்கு (அனுஹாஸன்)

No comments:

Post a Comment