Saturday, July 13, 2013

வானவில் சினி கேள்வி பதில் -03

 நமீதா பெற்றோரின் அனுமதி இல்லாமல் நடிக்கிறாராம். உண்மையா?

எம்.எஸ்.எப். சுக்னா
காத்தான்குடி

எதுக்கு பெற்றோர் அனுமதி? நமீதாவுக்கு 18க்கு மேலே (வயதைச் சொன்னோம்). 18க்கு மேல் என்றால் அவங்க (நீங்களும்தான்) விரும்புற
கட்சிக்கு வோட்டு போடலாம். விரும்புற இடத்துக்கு போய்வரலாம். அதுபோல யார் அனுமதி இல்லாமலும் நடிக்கலாம். வேண்டாம் என்று சொல்லும் உரிமை நமீதாவின் வீட்டுக்காரருக்குத்தான். அவர் எங்க இருக்கார் என்று தெரியலியே!

ரசிகர்கள் அனுமதி இருந்தால் போதும்



பிரசாந்துக்கு கல்யாணம் செய்யும் 'ஐடியா' ஏதும் இல்லையா?
எஸ். கீர்த்தனா, வவுனியா

இப்போதைக்கு இல்லை. கல்யாணத்தால் பட்டபாடு அவருக்கு என்றைக்குமே மறக்காது. நல்லதொரு நடிகரின் சினிமா வாழ்க்கையை ஒரு கல்யாணம்
எவ்வளவு மோசமாக பாதித்துவிட்டது! பிரசாந்த் மீண்டும் சினிமாவுக்கு திரும்பினாலும் விட்ட இடத்தை பிடிக்க முடியாது. மேலும் குண்டாகி வயதாகி விட்டதே!

கல்யாணம் வடதுருவம் பிரசாந்த தென்துருவம்.


ஸ்ருதியின் கவர்ச்சி எல்லை தாண்டி போகிறதே! அவரது அப்பா கண்டுகொள்ளமாட்டாரா?

எல். லோஷன். அக்கறைப்பற்று

3ல் ஸ்ருதி நடித்துக்காட்டினார்... எடுபடவில்லை. D- DAY யில் ஸ்ருதி காட்டி
நடித்தார்... பேசப்படுகிறது. நடிகை என்று வந்துவிட்டால் பேசப்படவேண்டும்.

ஸ்ருதிக்கு தெரியும்... கமலுக்கு புரியும்


நயன்தாரா கவர்ச்சி உடையில் வந்ததால் உதயநிதி கடுப்பாகிவிட்டாராமே?

எம்.எஸ். இஷானா, மாத்தளை

எங்கெங்கு எதையெல்லாம் காட்டவேண்டுமோ, அங்கங்கு அதைக் காட்டுதல் சிறப்பு.

கவர்ச்சி, உணர்ச்சி, மகிழ்ச்சி அனைத்துக்கும் இது பொருந்தும் அறியாதவரா உதயநிதி?


சோனியா அகர்வால் தனியாகவா இருக்கிறார்?
எம் கிஷோர். கொழும்பு 14

சினிமா நடிகை தனியாக இருப்பாரா? ஒரு நாயாவது துணைக்கு இருக்கும்.

துணை இருந்தென்ன பயன்; படமில்லாத போது...


நடிகை ரம்பாவை காணவில்லையே?
சுஜாதா. மத்துகம

சின்ன ரம்பாவை கொஞ்சிக்கொண்டு கனடாவில் இருக்கிறார்.

தொடை இன்சூரன்ஸ் இப்போது காலாவதியாமே!


சாந்தனுவின் அடுத்த படம் என்ன?

டீ. சர்மிகா. மிருசுவில்

பாவம் சாந்தனு. புகழ் பெற்ற அப்பா அம்மா இருந்தும் தமிழ் சினிமாவில் உரிய
இடத்தை பிடிக்க முடியவில்லை.

வாரிசு சினிமா மலையாளத்தில் கொடிகட்டிப் பறக்கிறது.


'தலைவா' திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுமா?

எஸ். சிவதர்ஷன், பதுளை

நிச்சயம் திரையிடப்படும். அதற்கு எந்த தடையும் இல்லை.

தீபாவளிக்கு முன்னரே காட்சி தருவான் தலைவா. தீபாவளிக்கு விநாயகம் கோச்சடையான்?

சபாஷ்... சரியான போட்டி...


ஹன்ஸிகா மேக் அப் இல்லாமல் அழகா இருப்பாங்களா?

தர்ஷி, யாழ்ப்பாணம்

'திருவிளையாடல்' படத்தில் ஒரு வசனம் வரும். பிரிக்க முடியாதது எது என்று
நாகேஷ் சிவாஜியிடம் கேட்பார். 'எதுகையும் மோனையும்' என்று சிவாஜி பதில் கூறுவார். அதுபோல பிரிக்க முடியாத இன்னொன்று நடிகையும், மேக்கப்பும்.

மேக்அப் இல்லாத ஹன்சிகா...?


No comments:

Post a Comment