Monday, July 22, 2013

கூத்தாண்டவர் கோவிலில் ஒரு நாள்….01

தாலி கட்டிய பின்னர் அரவாணிகள் மத்தியில் கூத்தும் கும்மாளமும்தான்…

கூவாகத்திலிருந்து   மணி ஸ்ரீகாந்தன்.

தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களின் தலைமையகம் என்றால் அது தமிழகம்தான்.நாள்தோறும் ஏதேனும் ஒரு முக்கிய கலை கலாச்சார நிகழ்வு எங்காவது ஒரு பகுதியில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும்.எனவே தமிழகம் ஒரு திருவிழா கூட்டமாகத்தான் இருக்கிறது.இச்சிறப்பான திருவிழாக்களில் அவை மதம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி,குறிப்பிடத்தக்க விழாதான் கூவாகத்தில் வருடா
கூத்தாண்டவர் கோயிலின் முகப்புத் தோற்றம்
வருடம் சித்திரா பவுர்ணமியில் இடம் பெறும் அரவாணிகள் திருவிழா.
சித்திரையில் பிறக்கும் சித்ரா பவுர்ணமி அரவாணிகளுக்கு கொண்டாட்ட நாள்.தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கோயில் சித்ரா பவுர்ணமியில் விழாக்கோலம் பூண்டுவிடும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ அரவாண், திருவிழா பதினைந்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

இதில் உள்ள சிறப்பம்சம்.இந்தியா முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான அரவாணிகள் இத்திருவிழாவில் கலந்து கொள்ள கூவாகத்திற்கு படையெடுப்பதுதான்.நீங்கள் உங்கள் வாழ்கையில் எத்தினை அரவாணிகளை பார்த்து இருப்பீர்கள்? இவ்விழாவுக்கு சென்றால் பல்மொழி பேசும் பல மாநிலங்களைச் சேர்ந்த அரவாணிகளை நீங்கள் சந்திக்கலாம்.
 தமிழ்,தெலுங்கு, கன்னட, மலையாளம்,இந்தி,குஜராத்,வங்காளி என்று திரும்பிய பக்கமெல்லாம்.அரவாணிகள் தான்.தப்பித்தவறி யார் மீதாவது முட்டிமோதி விட்டு சாரி சொல்லி விட்டு நிமிர்ந்து பார்த்தால் அவர் நாணப் புன்னகைக்கும் அரவாணியாகத்தான் இருப்பார்.
சென்னையிலிருந்து நூற்றி அறுபத்துரெண்டு கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்ம்.தென்னாட்காடு மாவட்டம் இரண்டாக பிரிக்கப் பட்டப்போது உதயமானதுதான் விழுப்புரம் மாவட்டம். புகழ் பெற்ற மயிலம் முருகன் கோயில்,சிங்காரம் கற்குகை கோயில்,வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சிக் கோட்டை,மேல்மலையலூர் அங்காளப் பரமேஸ்வரி போன்ற எண்ணற்ற சிறப்பிடங்களோடு அரவாணிகள் கூடி விழா எடுக்கும் கூவாகம் கோயிலும்,அமைந்திருப்பது விழுப்பரத்திற்கே உள்ள சிறப்பம்சம்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்திற்கு விழுப்புரத்திலிருந்து செல்ல வேண்டுமானால் ஆட்டோவிற்கு முன்னூறு ரூபா செலவாகும்.ரோடு மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.திருவிழா காலத்தில் மட்டும் விசேட பஸ் சேவை நடத்தப் படுகிறது.முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐந்து ரூபா அறவிடுகிறார்கள்.
கூவாகம் மிகவும் பின் தங்கிய கிராமம்.அதிகமான குடிசை வீடுகள்,பொட்டல்வெளி,தரிசுநிலம்,புழுதிமண்ணை தம் மீது வாரி தெளித்தப்படி நிற்கும் முள் செடிகள்.இவைகள்தான் கூவாகத்தின் அடையாளங்கள்.ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கும் அரவாணிகளை நோட்டம் விட்டப்படியே கூவாகம் அரவாண் அலயத்திற்குள் நுழைந்தோம்.
முன்வாசலில் சுமார் நாற்பதடி உயரத்தில் நிமிர்ந்து நிற்கும் ஆஞ்சநேயர் சிலை எம்மை கைகூப்பி வரவேற்கிறது.வாசலில் இருந்து சுவாமி கருவறை வரை நீண்டு நிற்கும் வரிசை அரவாணை தரிசிக்க காத்திருக்கிறது.
கூட்டம் கூட்டமாக கூடி கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கும் அரவாணிகள்.சேலை, தாவணி, ஜீன்ஸ்,டீசேர்ட் என்று வர்ணமயமாக அணிவகுத்து வரும் அரவாணிகள்.சில அரவாணிகளின்  அழகு தோற்றங்கள் பெண்களை மிஞ்சி விடுவதாக இருந்தன.சில அழகான திருநங்கைகள் தமது ஆசைக் காதலர்களுடன் பரந்து விரிந்து கிடக்கும் புளியந்தோப்புக்குள் காற்று புக முடியாத நெருக்கத்தில் மயங்கி கிடந்நதார்கள்.கூவாகம் கோயிலின் சுற்று வட்டாரத்தில் நிறைய புளிய மரங்களும் முற்செடிகளும் சோளக்காடும் நிறைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்.
சித்ரா பவுர்ணமி இரவு அரவாண் ஆலய குருக்கள் அரவாணிகளுக்கு தாலி கட்டினார்.இதில் நூற்றுக்கணக்கான அரவாணிகள் தாலி கட்டிக் கொண்டர்கள்.சில அரவாணிகள் தாலிக் கட்டிக் கொள்ள வில்லை.அப்படி தாலிக் கட்டிக் கொள்ளாமல் கோயிலின் ஓரத்தில் அமர்ந்திருந்த ஒரு

ePuhLk; muthzpfs;
அரவாணியை அணுகி நீங்கள் ஏன் தாலிக்கட்டிக் கொள்ளவில்லை?என்று கேட்டோம்.அதற்கு அவர் “புருஷன் சாகப் போறான்னு தெரிஞ்சு எந்த பொம்பளையாவது தாலிக்கட்டிக் கொள்வாளா?ஆனா நாங்க தெரிஞ்சும் கட்டிக்கிறோம்.அது எங்க சமூகத்தோட பழக்கம்.அத யாராலும் மாத்த முடியாது.ஆனாலும் நான் ஒரு கம்பனியில் வேலை பார்க்குறேன்.இன்னைக்கு தாலி கட்டிக்கிட்டா நாளைக்கு என் புருஷன் அரவாண் செத்துப் போயிடுவாரு.மறுநாள் நாங்க தாலியை அறுத்து,மஞ்சள் குங்குமத்தை அழித்து வெள்ளை சேலைக்கு மாறிடுவோம்.அப்புறம் ஒரு மாதம் வரை வெள்ளை சேலையுடன்தான் இருக்க வேண்டும்.வெள்ளை சேலை கட்டிக் கொணடால் ஒரு மாத காலத்துக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியாது.தொழில் செய்பவர்களுக்கு இது சாத்தியப்படாது.அதுதான் நான் தாலிக் கட்டவில்லை.”விளக்கம் சொன்னார் அந்த அரவாணி.அவர் பெயர் பூங்கோதை.

Mil khw;Wk; muthzpfs;
தாலிக் கட்டிக் கொண்டால் அன்று முதலிரவு அல்லவா?எனவே அன்றிரவு முழுவதும் ஆட்டமும் பாட்டமும்தான்.தாலிக்கட்டிக் கொண்ட அரவாணிகள்; அனைவரும் ஒன்றுக் கூடி ஆடிப் பாடி கும்மாளம் போட்டுக் கொண்டிருக்க,இதுதான் சமயம் என்று நேரம் பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள் அரவாணிகளுடன் சேர்ந்து ஆடத்தொடங்கினார்கள்.
கூவாகம் திருவிழாவில் அரவாணிகள் கலந்துக் கொள்வார்கள் என்று தெரிந்தவர்கள் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே இங்கே வந்து நோட்டம் விட்டு திரிவார்கள்.அரவாணிகளுடன் கண்டவர்கள் எல்லாம் கூடுவது எயிட்ஸ் மற்றும் வேறு பால் வினை நோய்களை பரவச் செய்யும் என்பதால் பல சமூக நிறுவனங்கள் இலவசமாக ஆணுறைகளை விநியோகிக்கின்றனர்.இது ஒருபுறம்
என்றால்,அரவாணிகளை கேளி செய்து அற்ப சந்தோசம் அடையும் கூட்டம் இன்னொருபுறம்.அரவாணிகளின் இடையை கிள்ளுவதும்,இடிப்பதும் முன்னழகை ஸ்பரிப்பதும் என சேட்டைகளில் ஈடுபடுவதற்க்காக இளைஞர்கள் உலாவிக் கொண்டிருந்தனர்.இளைஞர்களின் சேட்டைகளை பெரும்பாலும் அரவாணிகள் விரும்பியே ஏற்றுக் கொண்டார்கள். ‘சும்மா இருங்கடா நாதரிகளா’என்று சில அரவாணிகள் செல்லமாக கோபப்படுவதையும் நாம் கண்டோம்.திருச்சிலிருந்து வீரன் என்ற ஒரு சமூகசேவகர் ஐம்பதிற்கும் அதிகமான அரவாணிகளை திருவிழாவிற்கு அழைத்து வந்திருந்தார்.ஒவ்வொரு திருவிழாவிற்கும் அரவாணிகளோடு வந்து விடுவாராம் இவர்.

mofp my;y muthzp
 “நான் பதினைந்து தடவை இந்தக் கோவிலுக்கு வந்து இருக்கேன்.”என்றவரிடம் அரவாணிகள் பற்றி கேட்டோம் “புராண இதிகாசங்களில் என்க்கு நம்பிக்கை இல்லை.ஆனாலும் நான் கேள்விப் பட்ட கதையை சொல்லித்தானே ஆகணும்” என்று ஆரம்பித்தார் வீரன். “மகா பாரதத்தில் வரும் அர்ஜுணன் ஒரு ஸ்திரி லோலன்.சென்ற இடமெல்லாம் பொண்டாட்டி வைத்துக் கொள்வான்.அப்படி நாக கன்னிக்கும் அர்ஜுணனுக்கும் பிறந்தவன்தான் அரவாண் குருஷேத்திர போரில் பாண்டவர்கள் சார்பான களப் பலியாக இந்த அரவாண் தெரிவு செய்யப்படுகிறான்.

muthzpfspd;  jhyp mWf;fg; gLfpwJ.
ஆனாலும் களப் பலியாகிறவன் திருமணமானவனாக இருக்க வேண்டும் என்பது நியதி.ஆனால் அரவாண் கள்ளமில்லா திருமணமாகாத ராஜகுமாரன்.அக்குறையை நீக்க அவனுக்கு திருமணம் செய்து வைத்தப் பின் களப்பலி கொடுக்க தீர்மானிக்கப்படுகிறது.தன்னை மணக்கப் போகிறவன் சாகப் போகிறவன் என்று அறிந்தால் எந்தப் பெண்தான் சம்மதிப்பால்.அதனால் கிருஸ்ணர் ஆணுமற்ற பெண்னுமற்ற அரவாணியாக உருவெடுத்து அரவாணை திருமணம் செய்கிறார்.திருமணம் நடந்த மறுநாள் அரவாண் களப் பலியாகிறான்.
களப்பலி என்பது யுத்ததிற்கு முன் அறிவிக்கப்படும் உயிர்

xg;ghhp itf;Fk; muthzpfs;
பலி.பாலங்கள்,கட்டடங்கள் அமைக்கப் படுவதற்கு முன்னர் உயிர் பலி கொடுக்கும் வழக்கம் சமீபகாலம் வரை தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறது.
இந்த அரவாணுக்கு இந்தியாவிலேயே கூவாகத்தில் மட்டுமே கோவில் உள்ளது.இதனால் இக்கோவிலை நாடி இந்தியா எங்கும் உள்ள அரவாணிகள் வருகிறார்கள்.தமக்கென ஒரு அடையாளம் இல்லாத இவர்கள் இக் கோவிலையும்,திருவிழாவையும் தனித்துவ அடையாளமாக கருதி போற்றுகிறார்கள்.தமக்கென ஒரு குலதெய்வம் இருப்பதை பாக்கியமாக கருதுகிறார்கள்.இந்த திருவிழாவில் அரவாணை மணக்கும் அரவாணியாகத் தம்மை கருதி தாலிக் கட்டிக் கொள்ளும் அரவாணிகள் மறுநாள் அரவாண் களப் பலியானதும் தாலியை அறுத்துக் கொள்கிறார்கள்.இவ்வாறு விளக்கம் தந்தார் வீரன்.

Mirf;fhjyDld; muthzp
அரவாணிகள் உருவாவதற்கு தெய்வ குற்றம்தான் காரணம் என்கிறீர்களா?என்று ஒரு கேள்வியை தொடுத்தோம். “ஆர்மோன் குறைப்பாடுதான் முக்கிய காரணம்.சும்மா சாமின்னு ஆசாமிங்க சொல்லுறதை எல்லாம் நம்பாதீங்க.நான் பெரியாரிஸ்ட்”என்றவர் எம்மை விட்டு நகர்ந்து அரவாணிகள் கூட்டத்தோடு கலந்தார்.அவரோடு ஐந்து அரவாணிகள் மிகவும் நெருக்கமாக சென்றார்கள்.அப்போது நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.

அரவாணிகள் ஆட்டம் நிற்பதாக இல்லை.இளைஞர்கள் ஆளாளுக்கு ஒரு அரவாணியை இழுத்துக் கொண்டு புளியந்தோப்புக்குள் மறைந்தார்கள்.வைத்தக்கண் வாங்காம புளியந்தோப்பை பார்த்து கொண்டிருந்த எம்மை நோக்கி வந்த ஒரு நபர் “விடியும் வரைக்கும் இதே
கூத்துதாங்க,”விருப்பமானால் சொல்லுங்க ஒரு அரவாணியை ஏற்பாடு செய்கிறேன் என்றார் முகமெல்லாம் சிரிப்பாய்…அந்த சமூக சேவகருக்கு நன்றி சொல்லி விட்டு ஆட்டோ பிடித்து விழுப்புரம் வந்து ஹோட்டலில் தங்கினோம்.விழுப்புரம் தங்கும் விடுதிகள் அனைத்தும் வெளியூரில் இருந்து வந்த அரவாணிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இரவு நேரங்களில் பக்கத்து அறைகளில் தங்கியிருக்கும் அரவாணிகள் இளைஞர்கள் தங்கியிருக்கும் அறைகளின் கதவைத் தட்டுவார்கள் என்று என் நண்பர் சொன்னது எம் ஞாபகத்துக்கு வர தாழ்ப்பாளை சரி பார்த்துக் கொண்டோம்.விடிய காலை மூன்று மணியிருக்கும் …எனது அறைக் கதவு பலமாக தட்டப்பட்டது.

மேலும் வாசிக்க..
கூவாகத்தில் அரவாணிகள்.(2ம் பாகம்)