Saturday, March 16, 2013

இங்கிரியாவில் காமன் கூத்து விழா

காதல் கடவுள் மன்மதன் எரிக்கப்பட்டது எப்படி?


மணி  ஸ்ரீகாந்தன்ஈமெயில்,இன்டர்நெட்,கணனி என கடுகதி வேகத்தில் உலகம் என்னதான்
முன்னேறிக் கொண்டிருந்தாலும். சில கிராமப்புறங்களில் இன்னமும் பாரம்பரிய சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு பாதுகாக்கபபட்டு; வருவது வியப்பை ஏற்ப்படுத்துகிறது.இதில் ஒன்றுதான் பழங்கால தமிழர்களின் ‘கிராமிய கூத்து’இது பண்டைய இந்தியாவில் நடந்ததாக கருதப்படும் இந்துக் கடவுள்களின் கதைகளையும் பழந்தமிழரின் பெருமைகளையும் வீர வரலாற்றாக கூத்துபாணியில் மக்களுக்கு சொல்லும் ஒரு கலை வடிவம்.
ஊதாரணத்திற்கு அர்ச்சுனன் தபசு,அரிச்சந்திரன் கூத்து,குரவை கூத்து,பொன்னர்சங்கர் கூத்து,காமன் கூத்து போன்றவை அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கியவை.ஆனால் தற்போதைய நவீன டிஜிட்டல் நாகரீக வளர்ச்சியின் பாதிப்பில் இந்தக் கூத்து கலைவடிவத்தில் சில அழிந்துப் போய் விட்டது.மிச்சம் இருப்பது காமன் கூத்து மாத்திரமே!
தமிழ் நாட்டில் மயிலாடுதுறைக்கு பக்கத்தில் அமைந்திருக்கும் ‘திருக்குறுக்கை’வீரட்டானம் என்ற ஊரில் காதல் கடவுள் மன்மதனை சிவபெருமானை எரித்த சம்பவத்தை வரலாற்று கதையாகப் பாடி ‘காம தகன’விழா என்ற பெயரில் இன்றும் விழா எடுத்து தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த காம தகன விழா மலையகத்தில் மாசி உதயமானதுமே ஆரம்பமாகிவிடும்.நம் நாட்டில் இவ் விழா நுவரெலியா மாவட்டத்தில் நடைப்பெற்றாலும்.பிரமாண்டமாக நடைப்பெறுவது களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள இங்கிரிய றைகமையில்தான்.
தமிழ் சினிமாவில் வருகிற சங்கர் படம் மாதிரி பிரமாண்டமாக இருக்கும்.ஆயிரக்கணக்கான ரூபாய்களை கொட்டி மின்சார அலங்கார வளைவுகள்,விளக்குகள்,சுமார் பத்து கிலோ மீட்டருக்கு அப்பாலும் இருளை ஊடறுத்து செல்லக்கூடிய ‘லேசர்’விளக்கு என அந்த காமன் கூத்து நடைப்பெறும் திடலை பிரமாண்டப்படுத்தி இருப்பார்கள்.இதற்கெல்லாம் காரணம் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களே இவ் விழாவை நடாத்துவதுதான்.

துடிப்புமிக்க சில இளைஞர்களின் வழி நடத்தலினால் நடைப்பெறும் இவ் விழா எதிர்வரும்
(24-03-2013)அன்று இங்கிரிய றைகமையில் நடைப்பெறுகிறது.
மன்மதன் வீழ்ந்த இடம் இன்று வீரட்டேஸ்வரர்
ஆலயமாக காட்சியளிக்கிறது.
இந்தக் காதல் கடவுள் மன்மதன் சிவபெருமானால் எரித்து சாம்பலாக்கப்பட்ட சம்பவம் நடைப்பெற்றதாக கூறப்படும் தமிழகம் திருக்குறுக்கை வீரட்டானம் என்ற ஊரில் சொல்லப்படும் அந்தக் கதையைப் பற்றிய தகவலை தேட வீரட்டானத்திற்கு ஒரு நெடும் பயணத்தை மேற்க்கொண்டு நாம் சென்றதில் நமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த கட்டுறையை தொகுத்திருக்கிறேன்.

இனி கதையைப் பார்ப்போம்.திருக்குறுக்கையில் சிவன் தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்.அதுதான் அவருக்கு பிடித்த விஷயமாயிற்றே!ஆலமரத்தை பார்த்தால் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விடுவாரே…
காரணம் என்ன? தட்சன் சமாச்சாரம்தான்.அழைப்பில்லாமல் பார்வதி போக,யாகத்தீயில் மாள,சிவன் யாக குண்டலத்தை துவம்சம் செய்தாரே.அந்தப் பாவம் நீங்குவதற்கான பரிகார தியானம் இது.தியானம் தொடர்ந்து கொண்டேயிருக்க அது ஒரு அசுரனுக்கு லாபமாக இருந்தது.தரகாசுரன் பிரம்மாவைக் குறித்து கடும் தவம் இருந்தான்.அவனது தவ வலிமை தேவலோகம் வரை சுட ஆரம்பிக்க பிரம்மா அவனுக்கு காட்சி புரிந்தார்.
வீரட்டேஸ்வரர் லிங்கத்தை உற்றுப்பார்த்தால்
தாமரை பதிந்த தடம் ஒன்று புலப்படும்.மன்மதன்
எறிந்த பத்மபாணம் உண்டாக்கிய வடு என்கிறார்கள்.


“சாகா வரம் வேண்டும்”என்று கேட்டான் தரகாசுரன்.
“அதெல்லாம் முடியாது எப்படி மரணம் வேண்டும் என்று கேள் தருகிறேன்”என்றார் பிரம்மன்.அசுரன் யோசித்தான் சிவபெருமான்தான் தியானத்தில் இருக்கிறாரே என்ற தைரியதில் தராகன் “சிவபெருமானுக்கு இனி புத்திரன் பிறந்தால் அவனால் எனக்கு மரணம் ஏற்ப்பட வேண்டும்” என்றான்.பிரம்மனும் கொடுத்து விட்டார்.அவ்வளவுதான் தாருகனின் அட்டகாசம் ஆரம்பித்தது.தேவர்களையெல்லாம் ஓட ஓட விரட்டினான்.
அலறியடித்துக் கொண்டு எல்லோரும் பிரம்மாவிடம் ஓடினார்கள். “வரம் கொடுத்த என்னால் ஒன்றுமே செய்ய முடியாது ஒரே வழி சிவனின் தியானத்தை கலைத்து அவரின் மூலம் ஒரு புத்திரனை உருவாக்குவதுதான்.”என்றார் பிரம்மன்.

தேவேந்திரன் உடனே மன்மதனையும்,ரதியையும் அழைத்தான்.விஷயம் சொன்னான்.மன்மதனைப் புகழ்ந்தான்.உடனே மன்மதன் உச்சிக்குளிர்ந்தான். “என்னால் சிவபெருமானை காதல் வசப்படச் செய்ய முடியும்.என்னுடைய காம பாணங்களை வீசினால் சிவனும் அதில் வீழ்ந்து விடுவார்.”என்றார்.ரதிதேவி தடுத்துப் பார்த்தும் முடியவில்லை.மன்மதன் தனது கரும்பு வில்லோடு சிவனைத் தேடிக் கண்டுப்பிடித்தான்.
சிவபெருமான் பார்வதி மீது காதலும் மோகமும் கொள்ளும்படியாக,தன் கரும்பு வில்லை வளைத்தான்.ஆனால் அந்த வில் அவன் கையிலிருந்து நழுவி,தியானத்தில் இருந்த சிவனின் அருகில் போய் விழுந்தது.அதனால் அவரின் யாகம் கலைந்தது.
இங்கிரிய றைகமையில் உள்ள
காமன் கூத்து ஆலயம்


சிவபெருமானுக்கு கடும் கோபம் வந்தது.உடனே அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஜூவாலைகளோடு தீ வெளிப்பட்டது.அவ்வளவுதான் அந்த வினாடியே மன்மதன் எரிந்து சாம்பலானான்.திரும்பி பார்த்தவாரே சிவன் அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டதால். முன்னால் இருந்த நந்தி பின்னால் இருப்பது போல் ஆகி விட்டது.(வீராட்டானம் கோயிலில் இன்றும் நாம் இதை பார்க்க கூடியதாக உள்ளது.)
இதில் பெரிதும் நஷ்டம் அடைந்தவள் ரதிதேவிதான்.கதரினால்,கண்ணீர் மல்கினாள்.மயங்கி விழுந்தாள்.உடனே தேவர்கள் எல்லோரும் சிவனின் காலடியில் விழுந்தார்கள்.மனமிரங்கினார் ஈசன்.மன்மதன் உயிர் பெற்றான்.இந்தக் கதையைத்தான் காம தகன விழாவாக நடாத்தி வருகிறார்கள்.

டீ வியில் மெகாத்தொடர்கள் பார்த்து மகா கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நமது தமிழ் சந்ததிகள் இது போன்ற விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியை தருகிறது.  
                              

No comments:

Post a Comment