Friday, December 7, 2012

உலக அழிவு-09


உலகின் முடிவு காலம்:

நிர்ணயிர்பவன் சூரிய பகவான் மாத்திரமே!


kzp =fhe;jd;


எதிர்வரும் 21> காலை 11.11 நிமிடத்தோடு இவ் உலகம் தமது ஆயுளை முடித்துக்கொள்ளப் போகிறதா என்பதுதான்> உலக மக்களின் மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கிறது. உலகின் ஆயுளை கணித்து சொல்லியிருக்கும் மாயர் சமூக வரலாறு இருந்த இடமே தெரியாமல் அடிபட்டு போயிருக்கிறது. ஸ்பெயின் நாட்டவரின் குடியேற்றம்> விசித்திரமான மூட நம்பிக்கைகள்> பங்காளிச் சண்டைகள்> மற்றும் முறையற்ற விசவாயம் போன்றவைகள் மாயர் சமூகத்தின் அழிவுக்கு காரணமானது என்பது நிரூபனமான வரலாற்று உண்மை- மாயர் சமூகம் கலப்பு திருமணத்தை ஆதரிக்கவில்லை. தமது இனம் தனித்துவமாக வாழவேண்டும் என்பதற்காக மாயர் இனத்திற்குள்ளாகவே திருமணங்கள் நடைபெற்று வந்தன.


 இது தவிர அன்றைய மன்னர்கள் தமது இருப்புக்கான உத்தியாகக் கையாண்ட நாடுகளைக் கைப்பற்றும் யுத்த அரசியலை மாயர்கள் பின்பற்றவில்லை. இருக்கும் நிலமே போதும் என இருந்து விட்டனர்.  இதனால் சனத்தொகை பெருகிய அளவுக்கு காணி அதிகரிக்கவில்லை. அதிகரிப்பு ஏற்ற வகையில் வீட்டு வசதி> விவசாயம்> நீர்வசதி> வைத்திய வசதி என்பன அதிகரிக்கவில்லை. இதனால் அவர்கள் மத்தியில் வெறுப்பும்>மோதல்களும் ஏற்பட்டன. மாயர்களுக்கு என்றைக்குமே ஒரு தலைவன் இருந்ததில்லை. இதனால் அடக்க ஆள் இல்லாமல் அவர்கள் மத்தியில் சச்சரவுகள் நீண்டன. அவர்கள் அழிவுக்கு இவையே காரணமாயின.

உலகின் அழிவை கணித்துச் சொன்னவர்களுக்கு தமது சமூகத்தில ;என்ன நடக்கும் என்பதையும் அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்பதையும் அறிந்து கொள்ள முடியாமல் போனதா என்று கேள்விகள் எழுப்பப்படுவதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இம்மாதம் உலகம் பேரழிவை சந்திக்குமா என்ற கேள்விக்கு விண்ணியல் விஞ்ஞானிகள் வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.  பூமிக்கு வெளியே இருக்கும் ஒரு வஸ்து பூமியில் தாக்குதல் நடத்த வழியே கிடையாது என்கிறார்கள் இவர்கள். வேறு சாராரோ> சுனாமி> பெரு வெள்ளம்> பூமியதிர்ச்சி போன்ற பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் இவற்றை மாயன் கலண்டரோடு ஒப்பிடத் தேவையில்லை என்றும் வாதிடுகிறார்கள். பூமியில் என்றைக்கு அழிவு ஏற்படவில்லை? அழிவு உலக நியதி  என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

அடுத்ததாக உலக அழிவு பற்றிய ஆருடத்துக்கு வருவோம்
21ம் திகதி உலகம் அழிவை சந்திக்கும் என்று வைத்துக் கொண்டால் அப்பேரழிவுகள் எவ்வாறானதாக இருக்கும் என்பதில் சில யூகங்கள் இருக்கின்றன. அவை பற்றிப் பார்ப்போம். மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணுகுண்டுகளை கையில் வைத்துக்கொண்டு பேரழிவுகள் எப்படி எப்படி வரும் என்று கற்பனை செய்வதே கொஞ்சம் விசித்திரமானதுதான்.


சுமார் 6 மைல் விட்டமுடைய விண்கல் ஒன்று மிக வேகமாக பூமியில் மோதியதாலேயே 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னா பூமியில் வாழ்ந்த இராட்சத உயிரினங்களான டைனோசர்கள் முற்றாக அழிந்தன. கிட்டத்தட்ட அதேபோன்ற சம்பவம் ஒன்று பூமியில் நிகழ்ந்தால்  மனித இனத்துக்கும் அதோ கதிதான் என இவர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் அதாவது 1908 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சைபீரிய காட்டில் துங்கஸ்கா ஆற்றோரம் வீழ்ந்த விண்கல்லினால் டோக்கியோ நகருக்கு ஒப்பான வெளி ஒன்று உருவானது. அச்சமயம் மிகப் பிரகாசமான ஒளி தோன்றி மறைந்தது.

எதிர்வரும் டிசம்பர் 21-2012 காலப்பகுதியில் இதன் போது சுமார் 28 800 வருடங்களுக்கு ஒருமுறையே ஏற்படும் நிகழ்வாக பால்வெளி அண்டத்தின் மையத்திற்கு பூமியும் சூரியனும் வரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வரும் பட்சத்தில் பூமியின் ஈர்ப்பு விசையில் குளறுபடி ஏற்பட்டு மிகப்பெரியளவு இயற்கை அனர்த்தங்கள் அதாவது சுனாமி> பூகம்பம்> எரிமலை வெடிப்பு> டோர்னடோ என்பன ஏற்பட்டு உலகம் அழிவடையும்  என்று சொல்லப்படுகிறது.
'ஐஸ் ஏஜ்' எனப்படும் பனியுகத்தின் இறுதியில் அதாவது சுமார் 75 000 வருடங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள டோப விடேச உயிர் எரிமலை வெடித்து அதன் புகை மண்டலம் பூமியின்  முக்கால்வாசி வான் பரப்பை மறைத்ததாம். இதனால் பல நாட்களுக்கு சூரிய ஒளி மறைக்கப்பட்டு கடும் பனியில் வாடிய தாவரங்களும் விலங்குகளும் மடிந்தன.

இதே போன்ற ஒரு ஆபத்து 21 ஆம் நூற்றாண்டிலும் நேரிடலாம் என்ற ஒரு கோட்பாடு உண்டு. அதாவது அமெரிக்காவின் வியோமிங் மாநிலத்திலுள்ள மிகப் பெரிய பரப்பளவை உடைய விசேட உயிர் எரிமலையான ~யெல்லோ ஸ்டோன்| வெடித்ததால் அமெரிக்காவின் மூன்றில் இரண்டு பங்கு பகுதி புகை மண்டலத்தால் சூழப்பட்டு அழிவைச் சந்திக்கும் என கூறப்படுகிறது.

மக்களிடையே பெரும் பீதியை உருவாக்கியிருக்கும் இந்த மாயன் கலண்டரை 1947ம் ஆண்டு அமெரிக்க சிக்காகோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அன்று தொடங்கிய ஆயுள் கவுண்டிங் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன.

நாசாவின் ஆய்வின்படி 3600 ஆண்டுகளுக்கு ஒரு தடவை ~திபுரு| எனும் பெயருடைய வால் நட்சத்திரம் புவியைத் தாண்டிச் செல்வதாகவும் அதன் சுற்று வட்டத்துக்கமைய எதிர்வரும் 2012.12.22இல் பூமியைத் தொட்டுச் செல்லுமெனவும் ஒரு கோட்பாடு முன் வைக்கப்படிருக்கிறது.
இத் ~திபுரு| வால் நட்சத்திரம் தாண்டிச் செல்லும் போது புவியுடன் மோதுண்டால் மாபெரும் உலக அழிவு  ஏற்படுவது நிச்சயமெனக் கூறப்படுகிறது.

மீசோ அமெரிக்கன் ஆண்டு சுற்று 5125ன் இறுதி நாளாக டிசம்பர் 21 வருகிறதாம். அதனால் விண்கற்கள்> விண்மீன்கள் ஆகிய தாக்குதலால் உலகம் அழியும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இதற்கான சாத்தியம் குறைவாகவே இருக்கிறது. விண்கற்கள்> விண்மீன்கள் அல்லது பூமிக்கு அருகில் உள்ள வான் பொருட்கள் பூமியை மோதுவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தால் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்துள்ளது. இதில் பூமியில் உள்ள 60 சதவிகிதம் உயிர்கள் காலியாயின. அவற்றில் டைனோசர்களும் அடங்கும்.

உலகம் முழுவதும் உள்ள வான்வெளி விஞ்ஞான  அமைப்புக்களும்>விஞ்ஞானிகளும் நடத்திய ஆய்வில் இதுபோன்ற தாக்குதல்களால் பூமியில் குறைந்த பட்ச பாதிப்பே இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய பேரழிவு நடப்பதற்கான வாய்ப்பும் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறையே ஏற்படும். இந்தத் தாக்குதலால் சிறிய அளவிலான பாதிப்பே இருக்கும்.


+மிக்கு அருகில் உள்ள அளவில் பெரிய வான் பொருட்களால் உருவாகும் ஆபத்துக்களை எதிர்கொள்ளவும்> கணிக்கவும் சர்வதேசரீதியில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அப்படியான வான்பொருட்கள் 1100-ல் 80 சதவிகித பொருட்களின் இயல்பை முழுமையாக விஞ்ஞானிகள் வரையறுத்துவிட்டனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிச்ச 20 சதவிகிதம் பொருட்களின் இயல்பு தாக்கத்தையும் வரையறுத்துவிட முடியும்.

140 மீட்டர் முதல் ஒரு கி.மீ வரை விட்டம் உள்ள பூமிக்கு அருகில் உள்ள வான் பொருட்கள் மோதுமானால் கொஞ்சம் சேதங்களையே அவை ஏற்படுத்தலாம். அவற்றின் குணாதிசயங்களும் 2020க்குள் வரையறுக்கபட்டுவிடும். இந்த வான் பொருட்களை கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு தகவல்கள் அனுப்பப்படுகின்றன. கேம்ப்ரிட்ஜில் உள்ள இந்த அமைப்புதான் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வான் பொருட்களின் நிலைமைகளை கண்காணிக்கிறது. இப்பொருட்கள் ஆபத்தை ஏற்படுத்த முன்னாலேயே அணு ஆயுதம் அல்லது வேறு தாக்குதல் முறைகள் வழியாக அந்த ஆபத்தை தவிர்த்துவிடக்கூடிய நிலைமைக்கு மனிதன் வந்திருக்கிறான்.
நம்முன் உள்ள ஒரே தவிர்க்க இயலாத அபாயம் சூரியனின் முடிவுதான். சூரியன் தனது எரிபொருள் அனைத்தையும் இழப்பதற்கு இன்னும் 5000 மில்லியன் ஆண்டுகளாகும்

இந்நிலையில் உலக அழிவு இத்தனையாம் திகதி நிகழும் என்று எதிர்வு கூறுவது முழுமையாக பொய்யானது. ஆதாரமற்றது. முட்டாள்தனமானது.
இன்னும் இரண்டு கோடி ஆண்டுகள் முடிந்த பின்னர் சூரியனில் மாற்றங்கள் உருவாகத் தொடங்கும். அந்த மாற்றங்களைத் தாங்காமல் மனித குலம் அழிந்து போவது நிச்சயம்.

கடைசியாக ஒன்று. மாயன் கலண்டர் பற்றிய புதிய ஆய்வுகள்> 21ம் திகதி என்பது ஒரு யுகத்தின் அல்லது சுற்றின் முடிவு தவிர உலகின் முடிவு அல்ல என்றும் அதன் பின்னர் நடைமுறைக்கு வரும் புதுயுகம் மனித குலத்துக்கு சுபீட்சமாக அமையும் என்றும் கூறியிருக்கின்றன!

(முற்றும்)

No comments:

Post a Comment