Friday, December 7, 2012

உலக அழிவு-08

சீரும் சிறப்புமாக வாழ்ந்த மாயர்கள்

மணி ஸ்ரீகாந்தன்


மனித இனத்தின் ஆயுளுக்கு கெடு வைத்திருக்கும் இந்த மாயன் இனம் பண்டைய கால மத்திய அமெரிக்க நாகரிகம் என்று குறிப்பிடப்படுகிறது. மாயா, மாயன் பெயர்களின் அடிப்படையை ஆராய்ந்தால் அது ஏதோ இந்திய நாகரிகம் போலத்தான் தோன்றுகிறது. அமெரிக்காவில் இந்த நாகரீகம் பிறந்திருந்தால் பெயரில் செவ்விந்திய வாடை அடித்திருக்க வேண்டும். ஆனால் எந்த சம்பந்தமும் இல்லாமல் அங்கே மாயன் என்ற பெயர் எப்படி வந்தது என்பது ஒரு புதிராகவே உள்ளது.


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிடக்கலையில் கரைகண்டவர்களாக இந்தியர்கள் இருந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மருத்துவம், கலாசாரம், விவசாயம், கணிதம், எழுத்துமுறை, வானியல் என்று அனைத்து துறைகளிலும் இந்தியர்கள் சிறந்து விளங்கியிருப்பதை வரலாற்று தகவல்கள் தெளிவுபடுத்துகின்றன. அந்தக் காலக் கட்டத்தில் இலைதழைகளை ஆடையாக அணிந்துக் கொண்டு மேற்குலக மக்கள் காட்டுக்குள் வாழ்ந்தார்கள் என்பதுதான் வரலாறு. எனவே மாயன் என்ற இந்த இந்திய இனம் பிழைப்புக்காக மத்திய அமெரிக்காவிற்கு சென்றிருக்கவேண்டும் என்றும் பின்னர் அங்கேயே குடியேறி இருக்க வேண்டும் என்றும் ஒரு கோட்பாடு உண்டு. அதாவது,
தமிழகத்திலிருந்து பிழைப்புக்காக சென்று இலங்கை, மலேசியா, பர்மா, உள்ளிட்ட நாடுகளில் குடியேறியதுப்போல. அப்படிப்பார்த்தால் முதல் புலம்பெயர் தமிழர்கள் இவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்றும் கூட சொல்லாம்.

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு தேவதச்சன் ஒரு அரக்கு மாளிகை கட்டிக்கொடுத்தாக கூறப்படுகிறது. தேவதச்சனுக்கு மயன் என்றும் ஒரு பெயர் இருக்கிறது. எனவே மயன்தான் மருவி பிற்காலத்தில் மாயனாகி இருக்கலாம் என்கிறது இந்தக் கோட்பாடு. கி.மு 2600 ஆண்டுகளுக்கு முன்பே மாயன் நாகரிகம் இந்தியர்களுக்கு ஒத்த அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்திருந்தார்கள் என்பதை இங்கே குறிப்பிடுவது அவசியம்.
மத்திய அமெரிக்க பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட மாயன் கண்டுபிடிப்புக்களில் Tikal (டிக்கல்) என்று குறிப்பிடப்படும் ஒரு கோயில் முக்கியமானதாக கருதப்படுகிறது. சான் (700 கி.பி) என்ற மன்னனின் ஆட்சிக் காலத்தில் மாயர்கள் இதைக் காட்டியதாக கூறப்படுகிறது. இங்கே 145 அடி உயரத்தில் மன்னர் அடக்கம் செய்யப்பட்ட ஒரு இடமும் கல்லறையும் இருக்கிறது.
COPAN (கொபன்) என்ற சிதைந்த சிலையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலை பிற்காலத்தில் ஏழாம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டுள்ளதாக குறிப்புகள் உள்ளன.
மாயர்களின் சூரியனுக்கான கோவில்[Temple of the sun] தஞ்சை பெரிய கோயிலின் கட்டிட பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூரியக் கோவில் பாம்பு ஜாகுவார் என்று அறியப்பட்ட ஒரு ராஜாவுக்காக கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இக்கோவில் ஒரு மேடையின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளமைப்புக்குள் பதிவுகள், குறிப்புகள், மற்றும் படங்கள் உள்ளன.
மாயன் இனத்தவர்கள், அவர்களின் பொற்காலத்தின் போது பல துறைகளில் நுணுக்கங்களை ஆராய்ந்திருக்கிறார்கள். கலைத்திறனும் புத்திக் கூர்மையும் பெற்று விளங்கினார்கள். 16ம் நூற்றாண்டின் போது தென் அமெரிக்கப் பகுதியை ஆட்சி செய்த ஸ்பெயின் நாட்டினரின் கடுமையான தாக்குதலால் இப்பகுதி அடியோடு அழிந்து போனது. அவர்களின் கண்டுபிடிப்பும் எழுதிய நூல்களும் அச்சமயம் அக்கினிபகவானுக்கு இரையாக்கப்பட்டன.


தஞ்சை பெரிய கோவிலின் மாதிரியை ஒத்திருக்கும் பிரமிட் போன்ற சூரியக் கோவிலை சுற்றிலும் 4 பெரிய படிகட்டுகளும் அவற்றுள் அடங்கிய 365 படிக்கட்டுகளும் காணப்படுகின்றன. இவை யாவும் ஒரு ஆண்டிற்கான 4 காலங்களையும் 365 நாட்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் சூரியன், சந்திரன்,புதன்,சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்ளை முன்கூட்டியே கணக்கிட்டுத் தீர்மானிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்வுகளை அடியோட்டியே சடங்குகளை நடத்தினர். ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன.


மாயன் நகர பகுதியில் காணப்படும் Stelae எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள்; Heiroglyphik எழுத்து வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. மாயன்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை Bonamak என்ற இடத்தில் அமைந்த மாயன்களின் சிற்ப கலைகள் எவ்விதப் பாதிப்பும் இன்றி கிடைக்கப் பெற்றதால் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை முறையாகத் தங்களது ஆய்விற்குப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இச்சிற்பங்கள் மாயன்களின் நாகரிக வளர்ச்சியைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.  உயரமான மலை பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைப்பதால் இறைவன் இருக்கும் சொர்க்க வாசலை அவர்கள் சுலமாக நெருங்க முடிவதாக நம்பிக்கை கொண்டிருந்தனர்.

19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மாயன் நாகரிக எழுத்துக்களை கண்டுபிடித்து அவற்றை ஆராய்ந்ததில் ஸ்பெயின் நாட்டினரின் படையெடுப்பும், பல்;லாயிர கணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டதும் வருத்தத்துடன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் நான்கு புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே கிடைத்துள்ளது.
மாயர்கள் 20 அடிமான (bass 20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜிய பயன்பாட்டு முறையாகும். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள்.  இக்குறியீட்டு முறை ஒரு  மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.
மாயர்கள் வாழ்ந்தாக கூறப்படும் மத்திய அமெரிக்காவின்; (Guatemmala) குவதிமாலா என்ற பெயரே மருவி கௌதமாலவாகி போனதாகவும் அந்தப் பகுதியில் உள்ள சில இடங்கள் இன்னும் இந்திய சாயல் கொண்ட பெயர்களாலேயே அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

(தொடரும்…)

No comments:

Post a Comment