Friday, December 7, 2012

உலக அழிவு-07

உலகைக் கட்டியாண்ட டைனோசர்கள் எப்படி அழிந்தன?

மணி ஸ்ரீகாந்தன்


சுமார் பத்துலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் குரங்கு போன்ற ஒரு விலங்கில் இருந்து பிரிந்த ஒரு கிளையே படிப்படியாக வளர்ச்சி பெற்று சுயமாக சிந்தித்து செயலாற்றும் வல்லமை கொண்டதும் இரண்டு கால்களினால் நடக்கக்கூடிய மனிதனாக பரிணாமம் பெற்றது. உலகில் தோன்றிய உயிரின பரிணாம வளர்ச்சியில் அறிவில் கூடிய இனம் மனிதனாக இருப்பதாலேயே முதன்மை உயிரினமாக உலகில் பல்கிப் பெருகியிருக்கிறது. இத்தகைய கீர்த்தி பெற்ற மனித இனத்தின் ஆயுள் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடைந்து விடப் போவதாக மாயன் கலண்டர் குறிப்புகள் சுட்டிக் காட்டுகிறது.

மாயன் கலண்டர் குறிப்பிடுவது போல உலகம் அழிந்தால். இந்த உலகம் சூன்யமாகி விடும். அதற்குப் பிறகு பல மில்லியன் வருடங்களுக்குப் பிறகு தோன்றக் கூடிய ஒரு அறிவுள்ள உயிரினம் இவ்வுலகில் நடமாடுமானால் மனிதர்களின் தோற்றம். வளர்ச்சி மற்றும் அழிவை அது ஆய்வுகளின் அடிப்படையில் பதிவு செய்யும். எண்ணிப் பார்க்க கொஞ்சம் வேடிக்கையாக இல்லை? ஏனெனில் நமக்கு முன் தோன்றிய இன்னொரு உயிரினமான டைனோசர்கள் பற்றி நாம் தேடித் தேடி பதிவு செய்து வருகிறோம். இந்த டைனோசர்கள் ஐந்து முதல் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் அரசாண்டுக் கொண்டிருந்தன. அப்போது பாலூட்டிகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை. உலகெங்கும் திரிந்த இந்த மெகா உயிரினங்கள் பற்றியும் அதன் அழிவைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். டைனோசர்கள் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் தோன்றிய முதல் பாரிய இனமாகக் கருதப்படுகிறது. இதில் ஹொராசரஸ் என்ற ராட்சத டைனோசர்தான் முதல் தோன்றிய பெரிய உயிரினமாகும். அதற்குப் பிறகு செஸ்மோசரஸ், புறண்டோசரஸ், டெஜோனிசஸ், இகுவானோடன், செரடொப்சியன், டிரூடன், ஹட்ரோசர்ஸ், நனோ டைரானஸ், டைரானோசரஸ் ரெக்ஸ் உள்ளிட்ட பல ரகங்களில் பல அளவுகளில் பல்வேறு குணாம்சங்களைக் கொண்டதாக இவை விளங்கின.

டைனோசர் என்பது இவற்றுக்கு மனிதன் சூட்டியிருக்கும் பொதுப்பெயராகும். இந்த டைனோசர்களில் மாமிச பட்சினி. தாவர பட்சினி என இரு வகை டைனோசர்கள் வாழ்ந்துள்ளன. டைனோசர்ஸ் வாழ்ந்த அந்தக் காலப் பகுதியை மெசசோயிக் என அழைக்கிறார்கள். அந்தக் காலப் பகுதியில் உலகம் முழுவதும் சுமார் 14 கோடி வருடங்களாக இந்த டைனோசர்களின் ஆட்சியே நடை பெற்று வந்திருக்கிறது. இதோடு ஒப்பிடும் போது, இந்த உலகை மனிதன் பொறுப்பேற்று ஆளத் தொடங்கியிருக்கும் காலப்பகுதி. தூசுக்கு நிகரானது. இத்தனை குறுகிய காலத்தில் மனிதன் அழிந்து விடுவதா?

உயிரின வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் மிகவும் வெற்றிகரமான முறையில் மிக நீண்டகாலமாக உயிர்வாழ்ந்த உயிரினம் டைனோசர்கள் தான். மனிதனால் இவ்வளவு காலம் தாக்குப் பிடித்து வாழ்வது சாத்தியமில்லை. என்பதே மானிடவியலாளர்களின் பொதுவான அபிப்பிராயம். ஏனெனில் டைனோசர்கள் மனிதனைப் போல சுற்றுச் சூழலையும் இயற்கை அமைப்பையும் அழித்துக் கொண்டும் எதிர்த்துக் கொண்டும் வாழவில்லை. டைனோசர்கள். ஆரம்பத்தில் எலி அளவிலும் முயல் அளவிலும் தான் தோற்ற அமைப்பைக் கொண்டிருந்தன. ஆனால், திடீரென்று என்ன நடந்ததோ தெரியவில்லை அவை அசுர வளர்ச்சிப் பெற்று ராட்சத உருவங்களாயின. சுத்தமான காற்று, தின்னத்தின்னக் குறையாத தாவர வளம், புதிய சத்துகளைக் கொண்ட புதிய தாவரங்களின் தோற்றமும் பெருக்கமும், கனிம வளங்களும் டைனோசர்கள் பெரு வளர்ச்சி பெறக் காரணங்களாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

டைனோசர்களில் மிகப் பெரிய டைனோசராக 'சிஸ்மோசரஸ்'அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் நீளம் 140 அடியாகவும், ஒரு தொன் எடை கொண்டதாக இருந்ததாக அறியப்படுகிறது. டைனோசர்கள் ஆரம்பத்தில் தாவர உண்ணிகளாகவே இருந்திருக்க வேண்டும். வேட்டையாடுவதற்கான போதிய  உயிரினங்கள் வளர்ச்சி அடைந்த பின்னரேயே மாமிச பட்சணிகள் தோற்றம் பெற்றிருக்க வேண்டும். டைனோசர்களே ஒன்றை ஒன்று தாக்கிக் கொன்று உணவாகக் கொண்டிருக்கலாம். மற்ற வேட்டையாடும் விலங்குகளைப் போலவே இவையும் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த தாவர பட்சிணி டைனோசர்களை வேட்டையாடி உணவாகக் கொண்டிருக்க முடியும். டைனோசர்களில் பாலூட்டிகளும், அதே சமயத்தில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் டைனோசர்களும் வாழ்ந்துள்ளன. முட்டையிடும் டைனோசர்களை டக்வில் டைனோசர்ஸ் என்று அழைக்கிறார்கள்.

நீங்கள் வீட்டில் வளர்க்கும் கிளி, மைனாக்கள் தோன்றுவதற்கு அடிப்படை ஆதாரம் இந்த டைனோசர்கள் தான். பறவைகளாக இருந்த டைனோசர்களே பின்னர் மரத்தில் இருந்து கீழிறங்கி டைனோசர்களாக பரிணாமம் பெற்றன. அதனால்தான் ஆரம்பகால டைனோசர்கள் தாவர பட்சணிகளாகவும் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவையாகவும் இருந்தன. டைனோசர்கள் காலத்துக்கு முன்னர் பறவை என்றொரு இனம் இருக்கவில்லை. டக்பில் டைனோசர் பெரிய வெளவால்கள் போன்ற தோற்றம் கொண்டவை. முட்டையிட்டு குஞ்சு பொரித்து பிறகு சிறகு முளைத்து வானில் பறந்தன. இன்று வெளவாலையும் கழுகுகளையும் டைனோசர்கள் பறவைகளை ஞாபகப்படுத்தும் பறவையினங்களாகும் எனவே பறவை இனத்தின் ஆதி மூதாதையர் இந்த டைனோசர்கள் தான். பெரிய உருவமும், பகாசுரப் பசியையும் கொண்ட இந்த டைனோசர்களின் தோற்றத்தை இயற்கையின் அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

 தாவர பட்சிணி டைனோசர்கள். மிகவும் உயரமான மரங்களின் உச்சாணிக் கிளையையும் உடைத்து சாப்பிடும் அளவிற்கு அதன் கழுத்து நீண்டிருந்தது. பெரும் பசி கொண்ட இந்த மிருகங்களின் வேட்டையாடலுக்கு ஈடுகொடுக்க முடியாத மரம் செடி கொடிகள், தமது இனத்தை காப்பாற்றிக் கொள்ள இனப் பெருக்கத்தை பாரிய அளவில் மேற்கொள்ள பூக்களை உருவாக்கியதாகவும். பூக்களில் இருந்து விழுந்த விதைகள் செடி, கொடி, மரங்களாக வளர்ந்து டைனோசர்களின் பசிக்கு ஈடு கொடுத்ததாகவும் அதன் பின்னரே உலகில் பழங்களும், மரங்களும் அதிகமாக வளர்ச்சி பெற்றதாகவும், தாவரவியளாலர்கள் குறிப்பிடுகின்றனர்.

 எனவே பூக்கள் தோன்ற ஆதாரமாக டைனோசர்களே இருந்துள்ளன. டக்பில் டைனோசர் முட்டை பொரித்ததும் அதன் குஞ்சு 14 அங்குல நீளம் கொண்டிருந்தது. இந்தக் குஞ்சுகள் 4 ஆண்டுகளில் 20 அடி உயரமாக அசுர வளர்ச்சிக் கண்டதாம். டைனோசர்களின் கட்டுப்பாட்டில் உலகம் இருந்த போது. ஏனைய பாலூட்டிகள் தோற்றம் பெற வழி இல்லாமல் போய்விட்டது. எலி, முயல் போன்ற சிறிய உயிரினங்களே டைனோசர்களோடு உயிர் வாழ்ந்திருக்கின்றன. டைனோசர்கள் தொடர்ந்து வாழ்ந்திருந்தால் மனித இனம் மண்ணில் தோன்றியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது.

 14 கோடி ஆண்டுகளை வெற்றிகரமாக வாழ்ந்து முடித்த டைனோசர்களுக்கு வளைந்து கொடுக்கும் தன்மை அதிகமாக இருந்திருக்கிறது. அதனால்தான். அந்தக் காலத்தில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி, எரிமலை சீற்றம், கடற்கோள், எரி நட்சத்திரங்களின் தாக்குதல் உள்ளிட்டவைகளை தாக்குப் பிடித்திருக்கிறது. இழப்புகளுக்கு மத்தியில் தொடர்ந்து உயிர் வாழ்ந்திருக்கிறது. ஆறு கோடியே ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக டைனோசர்கள் அழிந்த போது சுமார் 12க்கும் குறைவான வகையைச் சேர்ந்த டைனோசர்களே உயிர்வாழ்ந்திருக்கின்றன. உலகெங்கும் பரவியிருந்த டைனோஸர்கள் அழிந்து போனதற்கு பலவித காரணங்கள் ஆய்வாளர்களினால் முன் வைக்கப்படுகின்றன.

எழுபதுகளில் மெக்ஸிகோவில் யுகடான் தீபகற்பப் பகுதியில் பெட்ரோலியம் தேடுதல் செய்து கொண்டிருந்த கிளென் பென் பீல்ட்(Glen Pen Field) என்பவர் சீக்ஷலூப்(Chicxulub) எனுமிடத்தில் 180 கி.மீ விட்டமுடைய பள்ளம் ஒன்றைக் கண்டு ஆய்வுகள் மேற்கொண்டார். அவற்றின் அடிப்படையில் அது ஒரு பெரிய விண்கல் தாக்கத்தால் உண்டானது என்பதையும் அந்த விண்கல் தாக்கம் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது என்பதையும் கண்டுபிடித்தார். தாக்கம் ஏற்பட்ட காலகட்டம் டைனோஸர்கள் அழிந்தகாலம். மேற்கூறிய ஆய்வகள் பற்றி அறியாமல் டைனோஸர்கள் அழிவுபற்றி எண்பதுகளில் ஆராய்ந்து கொண்டிருந்த கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி லூயிஸ் ஆல்வாரஸ், அவரது மகன் வால்டர் ஆல்வாரஸ் இருவரும் டைனோஸார் அழிவுக்கு ஒரு விண்கல் மோதலே காரணமாயிருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டனர். இதற்கு முக்கிய காரணம், அக்கால கட்டத்தில் உருவான படிவங்களின் விண்கற்களில் கிரிடியம் என்ற உலோகம் பரவலாகக் காணப்பட்டது. அறிவியல் உலகம் இன்று டைனோஸர்கள் அழிந்ததற்கான முக்கிய காரணம் சீக்ஷலூபில் மோதிய விண்கல் என்பதை ஏற்றுக் கொண்டது. அங்கு என்னதான் நடந்தது?

ஏறத்தாழ 10 கி.மீ அகலம் கொண்ட விண்கல் ஒன்று மணிக்கு 50,000 கி.மீ வேகத்தில் மோதியது. மோதி விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்திலிருந்து உடைந்த பாறைச் சிதறல்கள் வானுயரத்துக்குத் தூக்கியெறியப்பட்டு அவை மறுபடியும் வளிமண்டலத்தில் நுழைந்த போது எரிகற்களாகி விழுந்து, எங்கும் தீயைப் பற்றவைத்தன. முதல் விண்பாறை விழுந்தபோது ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 200,000 அணுகுண்டுகள் வெடித்தது போன்ற தாக்கத்தை உருவாக்கியது. உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பல ஆயிரம் மீட்டர் உயரமான மெகா சுனாமிகள் எழுந்தன. கரிபிய கடற்கரைப் பகுதிகளில் 600 கி.மீ உள்வந்தன என்பதற்கான புவியியல் ஆதாரங்கள் காட்டுகின்றன. விண்கல் விழுந்த இடத்தைச் சுற்றி 2000 கி.மீ. தூரத்திலிருந்த அத்தனை உயிரினங்களும் அழிந்துவிட்டன. மேலும் பெரும் மோதலால் உண்டான நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புகளையும் தூண்டின. விண்கல் மோதலால் ஏற்பட்ட புழுதியும், எரிமலைகள் வெடித்ததால் எழும்பிய சாம்பலும் வளிமண்டலத்தில் பரவியது.

அவை பூமியின் மேல் ஒரு பெரும் குடை கவிழ்த்தது. போல அமைய, வானம் கறுத்து பூமியின் மேற்பரப்பில் சூரிய ஒளிபடுவது குறைய, பூமி குளிர்ந்தது. இது ஏறத்தாழ பத்து ஆண்டுகள் தொடர்ந்தபோது டைனோஸர்கள் இத்தகைய பருவநிலை மாற்றத்துக்கும் அதனால் ஏற்பட்ட பஞ்சத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் அழிந்தன. இதுதான் டைனோசர்கள் சடுதியாக பூமியில் இருந்து மறைவதற்கான காரணமாக முன்வைக்கப்படுகிறது. இக்கோட்பாடு இன்று உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

(தொடரும்)

No comments:

Post a Comment