Friday, December 7, 2012

உலக அழிவு-06

ஒரே சமயத்தில் பல இடங்களில் பொம்பே ஃபீவர் காய்ச்சல் தாக்கியது எப்படி?

மணி ஸ்ரீகாந்தன்எரிகற்கள் எரிந்த மிகுதித் துண்டுகளாக மண்ணில் கிடக்கின்றன. நமக்குத்தான் அவை கல்லா, எரிகல்லா என்று தெரியாது. ஏன் நீங்கள் கூட சில சமயங்களில் விண்கற்களை மிதித்து நடந்திருக்கலாம். அவுஸ்திரேலிய பழங்குடியினர் இவற்றை மந்திர சக்தி கொண்ட கற்களாகக் கருதுகிறார்கள். குறிப்பாக இப்படியான கற்களை ஈமு பறவை இரையுடன் சேர்த்து விழுங்கி விடுமாம். அதனால் ஈமுவை கொன்று அதன் இறப்பையிலிருந்து இந்த விண்கற்களை எடுக்கும் ஒரு முறையை இந்த மாந்திரீகர்கள் கையாள்கிறார்கள். ஆவிகளுடன் பேசுவற்கு இந்த விண் கற்கள்தான் மாந்திரீகர்களுக்கு கை கொடுக்கிறதாம்.
ஒரே சமயத்தில் பல இடங்களில் பொம்பே ஃபீவர் காய்ச்சல் தாக்கியது எப்படி?எரிகற்கள் எரிந்த மிகுதித் துண்டுகளாக மண்ணில் கிடக்கின்றன. நமக்குத்தான் அவை கல்லா, எரிகல்லா என்று தெரியாது. ஏன் நீங்கள் கூட சில சமயங்களில் விண்கற்களை மிதித்து நடந்திருக்கலாம். அவுஸ்திரேலிய பழங்குடியினர் இவற்றை மந்திர சக்தி கொண்ட கற்களாகக் கருதுகிறார்கள். குறிப்பாக இப்படியான கற்களை ஈமு பறவை இரையுடன் சேர்த்து விழுங்கி விடுமாம். அதனால் ஈமுவை கொன்று அதன் இறப்பையிலிருந்து இந்த விண்கற்களை எடுக்கும் ஒரு முறையை இந்த மாந்திரீகர்கள் கையாள்கிறார்கள். ஆவிகளுடன் பேசுவற்கு இந்த விண் கற்கள்தான் மாந்திரீகர்களுக்கு கை கொடுக்கிறதாம்.

விண் கற்களின் தாக்கத்தால் இன்னொரு பயங்கர ஆபத்து இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அது வெளிக்கிரகத்திலிருந்து வரும் பக்டீரியாக்கள். இதனால் பெயரிடப்படாத பல நோய்கள் இப் பூமிக்கு வந்துக் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வெடித்து சிதறும் எரிமலைக் குழம்பிலும் அந்த வெப்பத்தை தாங்கும் பக்டீரியாக்கள் உயிர் வாழ்வதால். எரிகற்களிலும் வேற்று கிரக பக்டீரியாக்கள் பூமிக்குள் மிகவும் இலகுவாக வந்து பல புது நோய்கள் ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. ஏன் இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது கூட இப் பூமியின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு விண் கல் பக்டீரியாவோடு வீழ்ந்திருக்கலாம்.

வால் நட்சத்திரங்களுக்கு தூமகேது என்று ஒரு பெயர். வால் வெள்ளி அபசகுனத்தின் குறியீடாக நீண்ட நெடுங்காலமாக மக்கள் கருதி வந்திருக்கின்றனர். 1912ம் ஆண்டு புகழ்பெற்ற ஹெலீஸ் வால் நட்சத்திரம் பூமிக்கு அருகே வந்து சென்ற போது, என்ன நடக்கப் போகிறதோ என மக்கள் அஞ்சி நடுங்கினர். இந்த வருடத்தில் தான் டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை பலி கொண்டது. இரண்டு ஆண்டுகளின் பின்னர் முதலாம் மகா யுத்தம் வெடித்தது. கோடிக்கணக்கானோரை பலி கொண்ட யுத்தம் அது. இந்த விபரீதங்களுக்கு வால் நட்சத்திரத்தின் மீதே மக்கள் பலிபோட்டார்கள்.

ஹெலீஸ் வந்து போன பின்னர் அது கோடிக் கணக்கான சிறிய கற்கள், தூசுகளை பூமி பயணிக்கும் பாதையில் இறைத்து விட்டுச் சென்றது. பூமி அந்த இடத்தைக் கடந்த சமயத்தில் பல நூற்றுக்கணக்கான விண்கற்கள் பூமியில் சீறி விழுந்த அற்புதமான காட்சி இரவுகளில் அரங்கேறியது.

பேராசிரியர் சந்திரா விக்கிரமசிங்க என்ற இலங்கை விண்ணியல் ஆய்வாளர் மற்றொரு பிரிட்டிஷ் ஆய்வாளரான பிரட்ரிக் ஹொயிலுடன் இணைந்து ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். அக் கோட்பாட்டின் அடிப்படை, உலகின் முதலாவது நுண் உயிரினம் விண்கல் மூலமே பூமிக்கு வந்து அதில் இருந்தே உயிரினங்களின் தோற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதாக இருந்தது. பூமிக்கு வெளியே இருந்து பக்டீரியாக்கள், வைரசுகள் போன்ற நுண்ணுயிர்கள் உள்ளே வர முடியும் என்பதை அவர் சான்றுகளுடன் நிரூபித்தார்.


நாற்பதுகளின் போது'பொம்பே ஃபீவர்' என்ற ஒரு விஷக் காய்ச்சல் இன்றைய மும்பையில் திடீரெனத் தோன்றி பரவத் தொடங்கியது. இதுவல்ல விஷயம், உலகின் வேறு பகுதிகளிலும் இதே காய்ச்சல் தோன்றிப் பரவியது தான் ஆச்சரியம்!

இந் நிகழ்வை சுட்டிக் காட்டும் சந்திரா விக்கிரமசிங்க, பொம்பே ஃபீவருக்கான வைரஸ் இதற்கு முன் கண்டறியப்பட்ட வைரஸ் அல்ல என்றும் போக்குவரத்து கஷ்டங்கள் கொண்ட அக்காலத்தில் ஒரே சமயத்தில் ஒரு வைரஸ் காய்ச்சல் உலகின் வெவ்வேறு இடங்களில் பரவியதற்கு, இந்த வைரஸ்கள் பூமிக்கு வெளியில் இருந்து வந்ததே காரணம் என்று வாதிடுகிறார். இன்புளுவன்சா போன்ற சில நோய்கள் அவை காணப்பட்ட காலத்துக்கு முன்னர் பரவியதற்கு சான்றுகள் இல்லை என்றும் இவை விண்கற்கள் வாயிலாக பூமிக்கு வர முடிந்ததாலேயே புதுப்புது வியாதிகள் தோன்றின என்பது அவரது வாதமாகும்.

நமது இந்த புராணங்களிலும் விண் கற்கள் பற்றி சில விடயங்கள் குறிப்பிடப்படுகிறது. சூரிய பகவான் தமது பக்தனுக்கு அளித்ததாக கூறப்படும் சியாக மண்டக மணி அல்லது வானுலகிலிருந்து வந்த ரத்தினம், உண்மையில் ஒரு விண்கல்லாக இருந்திருக்கலாம். இதுப்போல ஐரோப்பிய நாடுகளில் இளம் பச்சை நிறத்தில் ஒளி ஊடுருவும் கற்களைக் கொண்டு விலையுயர்ந்த ஆபரணங்களை உருவாக்குகிறார்கள். இந்த கற்கள் மிகவும் அரிதாக கிடைக்கும் பொருளாம். இதுவும் விண் கற்களின் துகள்களாக இருக்க கூடிய வாய்ப்பு இருக்கிறதாம்.

பூமியின் மீது விழுந்த மிகப் பெரிய விண் கற்களில் ஒன்று இந்திய மகாராஷ்டிர மாநிலத்தில் வீழ்ந்திருக்கிறது. அந்த இடம் லோனார் ஏரியாக இன்று காட்சியளிக்கிறது. 1.8 கிலோ மீட்டர் விட்டமுடையது இந்த ஏரி.

இந்த ஏரியை பீமன் நீராடிய இடம். லாவன் என்ற அரசன் ஒளிந்த இடம் என்றே பத்மபுராணமும், கந்தபுராணமும் குறிப்பிடுகிறது. ஆனாலும் விண்கல் ஒன்று தாக்கியதால் உருவானது என்ற உண்மை கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே கண்டறியப்பட்டது. இந்த விண்கல் தாக்குதல் ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டிருக்க வேண்டுமாம். அப்போது இந்திய பெருங் கண்டத்தில்    உயிரினங்கள் வாழ்ந்திருந்தால் அது பாரிய உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பூமியை அழிக்க வல்ல விண்கற்களின் தாக்குதல் பற்றிய திரைக்கதைகளைக் கொண்ட ஹொலிவூட் திரைப்படங்கள் நிறைய வெளியாகி இருக்கின்றன. இந்த பிரபஞ்சம் பற்றிய கதைகள் அனைத்தும் புகழ்பெற்ற நாவல்களாக இருந்து பிறகு திரைப்பட வடிவை பெற்றன. 1979ல் வெளியானது 'மீட்டியர்' என்ற படம். அமெரிக்க ரஷ்ய விண்வெளி வீரர்கள் பூமியைத் தாக்கி அழிக்க வரும் 8 கி.மீ அளவுள்ள இராட்சத விண்பாறையை எப்படித் தாக்கி அழித்து மக்களை காப்பாற்றுகிறார்கள். என்பதை சித்தரித்த படம் அது. அது போல சமீபத்தில் வெளியான (ARMAGADON)   என்ற திரைப்படத்திலும், பூமியை அழிக்க வரும் 'டீப் இம்பெக்ட்'என்ற வால் நட்சத்திரத்தை நோக்கி செல்லும் விண்வெளி வீரர்கள்'டீப் இம்பெக்ட்' வால் நட்சத்திரத்தை அணு குண்டை வீசி அழித்து விடுவதாக கதை சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களிலும், உலக மக்கள் அனைவரும் காப்பாற்றபட்டு நலமாக வாழ்வதாக காட்டப்படுகிறது. ஆனால் பெரிய விண்கல் ஒன்று பூமியை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பது மருள வைக்கும் உண்மை.பூமியின் மீது மோதிய விண்கல்லை நேரில் கண்ட ஒருவர் எழுதினால் எப்படி இருக்குமோ என்பது போன்ற சுவாரஸ்யமான ஒரு குறிப்பு பைபிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வசனம் இதுதான் 'தீவட்டி போன்று எரிந்து கொண்டிருந்த விண்மீன் வானிலிருந்து பாய்ந்து வந்து நிலத்தின் மீது மோதியது. கல் மழையும் நெருப்பும் நிலத்தின் மீது பொழிந்தன. நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியும் அதிலிருந்த மரங்களும், புல் பூண்டுகளும் தீக்கிரையாகி சாம்பலாயின. அது விழுந்த படுகுழியிலிருந்து சூளையில் எழும் புகை போல புகை எழும்ப, கதிரவனும் வான் வெளியும் இருண்டன..' இது போன்ற விவரங்கள் இந்துப் புராணங்களில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் 'கல்கி'எழுதிய பொன்னியின் செல்வனில் ஆழிப் பேரலை தமிழகத்தை சின்னா பின்னமாக்கியது பற்றியும், கடலில் இராட்சத அலைகள் வானுயர எழுந்து வீழ்ந்ததையும் விபரித்து இருக்கிறது.

(தொடரும்)

No comments:

Post a Comment